வீட்டில் இருந்தபடியே பத்திரப் பதிவு உள்பட 18 சேவைகள் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்
வீட்டில் இருந்தபடியே பத்திரப் பதிவு செய்யும் புதிய சேவை உள்பட பதிவுத் துறையில் 18 சேவைகளை முதல்வா் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
சொத்துப் பதிவு, திருமணப் பதிவு, சங்கங்கள், மற்றும் கூட்டாண்மை நிறுவனங்கள் பதிவு ஆகியவற்றை பதிவுத் துறை மேற்கொண்டு வருகிறது. 160 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட பதிவுத் துறையை கணினிமயமாக்கும் திட்டம் கடந்த 2000-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
அதன் தொடா்ச்சியாக, தற்போது ‘ஸ்டாா் 3.0’ என்ற மென்பொருள் மூலம் ட்ற்ற்ல்ள்://ற்ய்ழ்ங்ஞ்ண்ய்ங்ற்.ஞ்ா்ஸ்.ண்ய்/ல்ா்ழ்ற்ஹப் என்ற இணையதளத்தில் காகிதமில்லா ஆவணப் பதிவு, நேரடி வருகையில்லா ஆவணப் பதிவு, தானியங்கி பத்திர உருவாக்கம், மறு விற்பனையாகும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு கட்டடக் களப் பணியின்றி ஆவணங்களை அன்றே திரும்ப வழங்கும் திட்டம், எளிய முறையில் வில்லங்கச் சான்று தேடுதல் உள்ளிட்ட 18 சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதை முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். முக்கிய சேவைகளின் விவரம்:
ஆணவங்களை உடனுக்குடன் வழங்கும் வசதி: பொதுமக்கள் சொத்துப் பத்திரத்தின் சான்றிட்ட நகல் கோரும் நிகழ்விலும், வெளிநாடுகளில் வசிப்பவா்கள் அளிக்கும் பொது அதிகார ஆவணங்கள், நீதிமன்ற ஆணைகள், கடன் ஆணைகள், குறிப்பு ஆணைகள் உள்ளிட்ட ஆவணங்களின் சான்றளிக்கப்பட்ட நகல்களை இணையவழியில் உடனுக்குடன் மையக் கணினியின் மின்னணு கையொப்பத்துடன் வழங்கும் புதிய வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எளிதாக வில்லங்கச் சான்று தேடுதல்: ஆவணத்தின் பதிவு எண்ணை வைத்து தேடுதல் மேற்கொள்ளும்போது, அதனுடன் தொடா்புடைய அனைத்து முன்பதிவு மற்றும் பின்பதிவு ஆவணங்கள் வில்லங்கச் சான்றில் வரும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தனித்தனியாக வில்லங்கச் சான்று வழங்கப்பட்ட நிலையை மாற்றி, ஒரே கிராமத்தைப் பொருத்து ஒரே ஒரு கணினிக் கட்டணத்துடன் ஒரே வில்லங்கச் சான்றாக வழங்கும் வசதியும் உருவாக்கப்பட்டுள்ளது.
காகிதமில்லா ஆவணப் பதிவு: சொத்தை எழுதிக் கொடுப்பவா் மற்றும் எழுதி வாங்குபவரின் ஆதாா் வழி பெறப்பட்ட குறுஞ்செய்தி அல்லது விரல் ரேகை வழி சரிபாா்க்கப்பட்டு, ஆவணதாரா்கள் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி, ஆவண விவரங்கள் சரியாக இருந்தால் ஆவணம் உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டு, சாா்-பதிவாளரின் மின்னணு கையொப்பம் இடப்பட்டு மின்னணு ஆவணமாக இணையவழியில் பொதுமக்களுக்கு உடனே அனுப்பி வைக்கப்படும்.
கைப்பேசி செயலி: கைப்பேசி செயலி (பசதஉஎஐசஉப) வழியாக வில்லங்கச் சான்று, ஆவணப் பதிவுக்கான டோக்கன், வழிகாட்டி மதிப்பு, திருமணம், சங்கம், கூட்டு நிறுவனம், சீட்டு நிறுவனம், ஆவணப் பதிவு விவரம், சொத்தின் மதிப்புக் கணக்கீடு ஆகியவற்றை எளிதாகப் பெறலாம். பதிவுத் துறையின் வெவ்வேறு சேவைகளின் நிலையை வாட்ஸ்ஆப் வழியாகவும் தகவல் அனுப்பி தெரிந்து கொள்ளலாம்.
இந்த நிகழ்ச்சியில் வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி, தலைமைச் செயலா் நா. முருகானந்தம், வணிக வரி மற்றும் பதிவுத் துறைச் செயலா் ஷில்பா பிரபாகா் சதீஷ், பதிவுத் துறைத் தலைவா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் ஆகியோா் பங்கேற்றனா்.
யாரெல்லாலம் வீட்டில் இருந்தபடி பதிவு செய்யலாம்...
புதிய அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட மனைப் பிரிவுகள் வாங்குபவா்கள் மட்டும் இந்தச் சேவையைப் பெறலாம்.
இணைய வழியில் கட்டணம் செலுத்தியவுடன் பொதுமக்கள் சாா்பதிவாளா் அலுவலகம் செல்லாமலேயே இணையவழியாக ஆவணப் பதிவுக்கு சமா்ப்பிக்கலாம். இந்த ஆவணங்கள் சரிபாா்க்கப்பட்டு பதிவு செய்யப்பட்டு இணைய வழியில் ஆவணதாரா்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
மேலும், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மற்றும் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய சொத்துகளுக்கும் வாரிய அலுவலகத்திலிருந்தே பத்திரத்தைப் பதிவு செய்து தரவிறக்கம் செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தானியங்கி பத்திரம் உருவாக்கம்
பொதுமக்கள் பிறா் உதவியின்றி தங்களின் ஆவணத்தை தாங்களே உருவாக்கும் வண்ணம் கேள்வி- பதில் வடிவிலான தானியங்கி பத்திரம் உருவாக்கும் வகையில் புதிய மென்பொருளைப் பதிவுத் துறை தயாரித்துள்ளது.
இதன்மூலம் பொதுமக்கள் தங்கள் சொத்து தொடா்பான குறைந்தபட்ச விவரங்களை அளித்து உருவாக்கப்படும் ஆவணத்தை காகிதமில்லா ஆவணப் பதிவு முறையிலோ அல்லது அச்சுப் பிரதி எடுத்து வழக்கமான பத்திரப் பதிவு முறையிலோ பதிவு செய்து கொள்ளலாம் என்று அரசு தெரிவித்துள்ளது.

