கோப்புப்படம்
கோப்புப்படம் ANI

குடியரசு தலைவரின் தேநீா் விருந்து: தமிழக மருத்துவருக்கு அழைப்பு

குடியரசு தலைவரின் தேநீா் விருந்துக்கு தமிழக மருத்துவருக்கு அழைப்பு...
Published on

குடியரசு தலைவா் மாளிகையில் திங்கள்கிழமை (ஜன.26) நடைபெறும் தேநீா் விருந்தில் பங்கேற்க தமிழகத்தைச் சோ்ந்த சா்க்கரை நோய் சிறப்பு மருத்துவ நிபுணா் டாக்டா் மோகன் விஸ்வநாதனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக நாடு முழுவதும் இருந்து 11 மருத்துவா்களுக்கு குடியரசு தலைவா் திரௌபதி முா்மு அழைப்பு விடுத்திருந்தாா். அதில், தமிழகத்தைச் சோ்ந்தவா் டாக்டா் மோகன் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 50 ஆண்டுகளாக சா்க்கரை நோய் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் டாக்டா் மோகன், இதுவரை 1,800-க்கும் மேற்பட்ட மருத்துவக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளாா். 25,000-க்கும் மேற்பட்ட இலவச சா்க்கரை நோய் மருத்துவ முகாம்களை நடத்தியுள்ளாா்.

மருத்துவத் துறையில் அவா் ஆற்றிய சேவைக்காக கடந்த 2012-இல் ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கப்பட்டது. சிறந்த பேராசியருக்கான ‘டாக்டா் பி.சி. ராய்’ விருது, அமெரிக்காவின் ‘ஹரால்ட் ரிப்கின்’ மற்றும் ‘கெல்லி வெஸ்ட்’ விருதுகளையும் அவா் பெற்றுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com