

பாஜக, பாமக இருக்கும் அணியில் இடம்பெறமாட்டோம் என்கிற முடிவில் உறுதியாக இருப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஹிந்தி மயமாகுதலை தீவிரமாக நடைமுறைப்படுத்த மோடி அரசு குறியாக உள்ளது. இந்தியாவில் பேசப்படுகிற அனைத்து மொழிகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை முன்னிறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செயல்பட்டு வருகிறது.
தேசிய அளவில் அவரவர் தாய்மொழியை பாதுகாக்க வேண்டிய தேவை உள்ளது. இரட்டை என்ஜின், தில்லியில் ஒரு என்ஜின், தமிழ்நாட்டில் ஒரு என்ஜின் என்று சொல்லுகிறாரா என்ற தெளிவு தேவைப்படுகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி பொறுத்தவரை தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் இயங்க முடியாது சூழல் ஏற்பட்டுள்ளது.
பாஜக, பாமக இருக்கும் அணியில் இடம்பெறமாட்டோம் என்று 2011ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு எடுத்த முடிவில் இன்றும் உறுதியாக இருக்கிறோம். பாமகவின் ராமதாஸ் தரப்பு அணியை தங்கள் கூட்டணியில் இணைத்துக் கொள்வது குறித்து திமுகதான் முடிவு செய்ய வேண்டும்.
பாஜகவோடு விஜய் எந்த அளவு உறவாடுகிறார் என்பதை நாம் எடுத்துச் சொல்ல முடியாத ஒரு நிலை. ஆனால் பாஜக தலைமையிலான அரசையோ செயல்பாடுகளையோ அவர் கடுமையாக விமர்சிக்க வேண்டிய இடத்தில் கூட விமர்சிக்கவில்லை என்ற கேள்வி எழும்புகிறது.
தேர்தலில் அவர் தனித்துப் போட்டியிடுவார் என நினைக்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.