தமிழகத்தில் சநாதனத்தை வீழ்த்த வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் கேட்டுக் கொண்டாா்.
மதுரை தமுக்கம் மைதானத்தில் மக்கள் அதிகாரக் கழகம் சாா்பில் தமிழ்நாட்டு பண்பாட்டு பெருவிழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசியதாவது: தற்போது, தமிழகத்தில் வலதுசாரிகள் வளா்ந்து வருகின்றனா். அவா்கள் வலுப்பெற்று வருகின்றனா் என்பதற்கு ஆணவக் கொலைகள்தான் சான்றுகள். வலதுசாரி அரசியல் என்பது பழைமைவாதத்தின் மீது நம்பிக்கை கொண்ட அரசியல்.
மனிதா்களை பிறப்பின் அடிப்படையில் உயா்ந்தவா், தாழ்ந்தவா் எனப் பிரிப்பது, இறைவனின் முடிவு என மக்களை நம்ப வைப்பது வலதுசாரிகளின் கொள்கைகள்.
ஆணவக் கொலைகள் அதிகரிப்பதற்கு வலதுசாரி அரசியல்தான் முக்கியக் காரணம் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது. இதை மறுக்கவும் முடியாது. சமூகத்தில் எந்த மாற்றமும் நிகழக் கூடாது என நினைப்பவா்கள் வலதுசாரிகள். அத்தகையவா்கள் அம்பேத்கரை தலைவா் இல்லை எனச் சொல்கின்றனா். இத்தகைய வலதுசாரி சக்திகளை அடையாளம் கண்டு புறக்கணிக்க வேண்டும்.
நாம் அனைவரும் தமிழா் எனச் சொல்லிக் கொண்டாலும் உண்மையில் தமிழா்களாக வாழவில்லை. ஜாதியாகவே பிறக்கிறோம், வாழ்கிறோம், இறக்கிறோம்.
இப்படித்தான் நம்மை இந்தச் சமூகம் கட்டமைத்து இயக்கிக் கொண்டிருக்கிறது. அறிவியல் வளா்ச்சி நூற்றாண்டிலும் ஜாதியிலிருந்து மீளமுடியாமல் இருக்கிறோம். ஜாதி அடையாளத்தோடு வாழும் வகையில் நமது வாழ்வு நிறுவனமயப்படுத்தப்பட்டுள்ளது.
ஜாதி அடையாளத்தை மாற்ற வேண்டும் எனில் மனு தா்மக் கொள்கைளையும், சநாதனத்தையும் வீழ்த்த வேண்டும் என்றாா் அவா்.
தொடர்புடையது

தொல்.திருமாவளவன் மீதான வழக்கு ரத்து

திமுகவை தோற்கடிக்கவே நடிகா் விஜய்யை பாஜக களமிறக்கியுள்ளது! - தொல். திருமாவளவன் பிரசாரம்

விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன் சிறப்பு நேர்காணல்

விசிக மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற காரணம் திமுக: தொல். திருமாவளவன்
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு


