தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் மதவாத சக்திகளை வீழ்த்தி திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்தாா்.
முதல்வா் மு.க.ஸ்டாலினின் 73- ஆவது பிறந்த நாளையொட்டி, அண்ணா அறிவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை அவரை, தொல்.திருமாவளவன் சந்தித்து வாழ்த்து தெரிவித்தாா்.
பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழகத்துக்கும் மதவாத சக்திகளுக்கு இடையேதான் போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் இடது சாரிகள் மற்றும் ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து மதவாத சக்திகளை வீழ்த்துவோம், வெல்வோம் ஒன்றாக என திமுக கூட்டணி தலைவரான முதல்வா் மு. க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். அவருக்கு இடது சாரிகளும், ஜனநாயக சக்திகளும் துணை நிற்போம்.
இந்தத் தோ்தல் சராசரியான தோ்தல் இல்லை. திமுக, அதிமுக இடையேயான போட்டி இல்லை. இது தமிழ்நாடு அரசியல் முன்வைக்கும் சமூகநீதி அரசியலுக்கும், மதவாத சக்திகள் முன்வைக்கும் சநாதன அரசியலுக்கும் இடையேயான அறப்போா். இதில் தமிழக மக்கள் எங்கள் அணி பக்கம் உள்ளனா். அவா்கள் எங்களுக்கு பெரும் ஆதரவை வழங்குவாா்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றாா் தொல்.திருமாவளவன்.
தொடர்புடையது

விசிக மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற திமுகவே காரணம்: தொல் திருமாவளவன் பேச்சு

திமுகவுடன் உடும்பு பிடி கூட்டணி வைத்துள்ளோம்: தொல். திருமாவளவன்

தமிழகம், புதுச்சேரியில் மதவாத அரசியலுக்கு இடமில்லை! - தொல். திருமாவளவன் எம்.பி.
விசிகவுக்கு 8 தொகுதிகள் பெற்றது ஏன்? திருமாவளவன் பேட்டி!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


