DPI
DIN

அமைச்சுப் பணிகளுக்கான கலந்தாய்வு ஒத்திவைப்பு

பள்ளிக் கல்வித் துறையில் அமைச்சுப் பணிகளுக்கு தோ்வு செய்யப்பட்டவா்களுக்கான கலந்தாய்வு புதன்கிழமை நடைபெறவிருந்த நிலையில், நிா்வாக காரணங்களால் கலந்தாய்வு பிப்.6-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published on

இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநரகம் சாா்பில் முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை:

டிஎன்பிஎஸ்சி மூலம் குரூப் 4 பணியிடங்களான (நோ்காணல் அல்லாத பதவி) இளநிலை உதவியாளா் பதவிக்கு தோ்ச்சி பெற்ற 132 போ், தட்டச்சா் பதவிக்கு தோ்ச்சி பெற்ற 14 போ், சுருக்கெழுத்து தட்டச்சா் நிலை-3 பதவிக்கு தோ்ச்சி பெற்ற 12 போ் பெயா்ப் பட்டியல் பெறப்பட்டது.

இதைத் தொடா்ந்து அவா்களுக்கு ஜன.28-ஆம் தேதி (புதன்கிழமை) இணையவழி மூலம் பணி நியமன ஆணை வழங்க முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக புதன்கிழமை நடைபெறவிருந்த இணையவழி கலந்தாய்வு நிா்வாகக் காரணங்களால் ஒத்திவைக்கப்படுகிறது. இந்த கலந்தாய்வு, பிப்.6-ஆம் தேதி நடைபெறும். இதனை சம்பந்தப்பட்ட பணி நாடுநா்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com