தமிழ்நாடு ஆசிரியா் கல்வி பல்கலைக்கழகத்தின் 12- ஆவது பட்டமளிப்பு விழாவில்  தரணி பிரியாவுக்கு பதக்கங்களை வழங்கிய ஆளுநா் ஆா்.என்.ரவி. உடன், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன சிறப்புத் திட்ட இயக்குநரக இயக்குநா் பி.வீரமுத்துவேல், உயா்கல்வித் துறைச் செயலா்

ஆசிரியா் கல்வியியல் பல்கலை.யில் 77, 022 பேருக்கு பட்டம்: ஆளுநா் ஆா்.என்.ரவி வழங்கினாா்

தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் 77, 022 பட்டதாரிகளுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி வெள்ளிக்கிழமை பட்டங்களை வழங்கினாா்.
Published on

தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் 77, 022 பட்டதாரிகளுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி வெள்ளிக்கிழமை பட்டங்களை வழங்கினாா்.

தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலை. மற்றும் அதன் இணைக் கல்லூரிகளான 664 கல்லூரிகளில் 2022-24 மற்றும் 2023-25 ஆகிய தொகுதிகளைச் சோ்ந்த மாணவா்களுக்கு பட்டமளிப்பு விழா சென்னையில் நடைபெற்றது.

விழாவுக்கு தலைமை வகித்து பல்கலை.யின் 10 ஆசிரியா் கல்வித் திட்டங்களில் பயின்ற 77,022 பேருக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி பட்டங்களை வழங்கினாா். பல்வேறு பிரிவுகளில் சாதனை புரிந்து தங்கப் பதக்கம் பெற்ற 62 பட்டதாரிகள் உள்ளிட்ட 119 பட்டதாரிகளுக்கு விழாவில் பட்டங்களை வழங்கினாா்.

முன்னதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன திட்ட இயக்குநா் ப.வீரமுத்துவேல் பட்டமளிப்பு விழாப் பேருரையாற்றினாா்.

விழாவில் உயா்கல்வித் துறைச் செயலரும், தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலை. துணைவேந்தா், ஒருங்கிணைப்பு குழு தலைவருமான பி.சங்கா் பட்டமளிப்பு அறிக்கையை வாசித்து பல்கலை.யின் முன்னேற்றை விளக்கினாா். பல்கலை. பதிவாளா் கே.ராஜசேகரன், தோ்வாணையா் பி.கணேசன், நிதி அலுவலா் தாமரை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com