காரைக்குடி அருகே புதிய வேளாண் கல்லூரியைத் திறந்துவைத்தார் முதல்வர்!

காரைக்குடி அருகே வேளாண் கல்லூரி திறப்பு விழா பற்றி..
Chief Minister M.K. Stalin inaugurated the agricultural college near Karaikudi
காரைக்குடி அருகே புதிய வேளாண் கல்லூரியைத் திறந்துவைத்தார் முதல்வர்.DIPR
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே புதிய வேளாண் கல்லூரியை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் 2 நாள் பயணமாக சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார். அங்கு ரூ. 2,872 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடக்கிவைக்கிறார்.

சிவகங்கையில் காரைக்குடி அருகே கானாடுகாத்தானில் ரூ. 61.78 கோடி மதிப்பில் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். வேளாண் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள சி.சுப்பிரமணியம் பன்னோக்கு அரங்கத்தையும் திறந்து வைத்தார்.

மேலும் காரைக்குடியில் அரசு சட்டக்கல்லூரியை திறந்துவைத்து முதல்வர், டைடல் நியோ பூங்காவையும் பயன்பாட்டிற்கு திறந்துவைத்தார்.

மேலும் மக்களுக்கு அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.

முன்னதாக சிவகங்கை மாவட்டத்துக்கு வந்துள்ள முதல்வருக்கு திமுக நிர்வாகிகள், அரசு அதிகாரிகள், மக்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.

Summary

Chief Minister M.K. Stalin inaugurated the agricultural college near Karaikudi

Chief Minister M.K. Stalin inaugurated the agricultural college near Karaikudi
தங்கம் விலை சவரனுக்கு ரூ. 7,600 குறைவு! வெள்ளி கிலோ ரூ. 55,000 குறைவு!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com