தங்கம் விலை சவரனுக்கு ரூ. 7,600 குறைவு! வெள்ளி கிலோ ரூ. 55,000 குறைவு!!

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்...
Chennai gold and silver rate today
IANS
Updated on
1 min read

சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று(சனிக்கிழமை) ஒரேநாளில் ரூ. 7,600 குறைந்துள்ளது.

தங்கத்தின் விலை இதுவரை இல்லாத அளவுக்கு வேகமாக உயர்ந்து வருகிறது. கடந்த ஜன. 29 அன்று அதிகபட்சமாக ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 9,520 உயர்ந்தது.

இதையடுத்து நேற்று(ஜன. 30) காலையில் சவரனுக்கு ரூ. 4,800, மாலையில் ரூ. 2,800 குறைந்து மொத்தமாக ரூ. 7,600 குறைந்தது.

தொடர்ந்து இன்றும்(ஜன. 31, சனிக்கிழமை) தங்கம் விலை சவரனுக்கு ரூ. 7,600 குறைந்துள்ளது. அதன்படி இன்று ஒரு சவரன் ரூ. 1,19,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் தங்கம் ரூ. 950 குறைந்து ரூ. 14,900-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் குறைவு!

வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ. 55 குறைந்து ரூ. 350-க்கும் ஒரு கிலோ ரூ. 55,000 குறைந்து ரூ. 3,50,000 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Summary

Chennai gold and silver rate today

Chennai gold and silver rate today
இரண்டாமிடம்! நீரிழிவு நோய்க்கு இந்தியர்கள் செலவிடும் தொகை எவ்வளவு தெரியுமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com