234 தொகுதிகளிலும் திமுக நட்சத்திரப் பேச்சாளர்கள் நாளை முதல் பிரசாரம்!

பிப். 1 - பிப். 28 வரை தமிழகமெங்கிலும் ‘தமிழ்நாடு தலைகுனியாது’ என்னும் பெயரில் திமுக தேர்தல் பிரசாரம்
234 தொகுதிகளிலும் திமுக நட்சத்திரப் பேச்சாளர்கள் நாளை முதல் பிரசாரம்!
Updated on
1 min read

234 தொகுதிகளிலும் திமுக நட்சத்திரப் பேச்சாளர்கள் நாளை(பிப். 1) முதல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்.

சென்னையிலுள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலர்கள் கூட்டம் கடந்த ஜன. 20இல் முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பிப். 1 - பிப். 28 வரை தமிழகமெங்கிலும் ‘தமிழ்நாடு தலைகுனியாது’ என்னும் பெயரில் திமுக தேர்தல் பிரசாரம் நடத்தப்படும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி, தொகுதிக்கு 4 இடங்களில் ‘தமிழ்நாடு தலைகுனியாது’ என்னும் பெயரில் நடத்தப்படும் பிரசாரத்தில், நட்சத்திரப் பேச்சாளர்கள் பங்கேற்று அரசு சாதனைகளை விளக்கிப் பேசும் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்று அக்கட்சித் தலைமை தெரிவித்துள்ளது.

234 தொகுதிகளிலும் திமுக நட்சத்திரப் பேச்சாளர்கள் நாளை முதல் பிரசாரம்!
காரைக்குடி அருகே புதிய வேளாண் கல்லூரியைத் திறந்துவைத்தார் முதல்வர்!
Summary

DMK star campaigners will begin campaigning in all 234 constituencies from tomorrow!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com