

இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், “இடைநிலை ஆசிரியர்கள் சமவேலைக்கு சமஊதிய போராட்டம் சார்ந்து இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அதில் மூன்று நபர்கள் ஊதிய குழு அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்பட்டு இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு சரி செய்யப்படும் என்றதின் அடிப்படையிலும் நமது அரசு மற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் மீது நம்பிக்கை வைத்து நல்லதொரு முடிவு ஏற்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் கேட்டுக் கொண்டதின் அடிப்படையில் மாணவர்களின் கல்வி நலன், நெடு நாள்களாக போராடிவரும் இடைநிலை ஆசிரியர்கள் உடல் நலனை கருத்தில் கொண்டு நல்லெண்ண அடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது.
கற்றல் இடைவெளியை நீக்கி முன்பைவிட கற்பித்தல் பணியில் வெகு சிறப்பாக ஈடுபடுவோம் என்று உறுதி அளிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.
சமவேலைக்கு சம ஊதியம் கோரி, இடைநிலை ஆசிரியர்கள் ஒரு மாதத்துக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், ஊதிய பிரச்னை குறித்து உரிய முடிவு எடுக்கப்படும் என்று கூறிய அமைச்சர் அன்பில் மகேஸ், போராட்டத்தைக் கைவிடுமாறு வேண்டுகோள் விடுத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.