“இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 27 திருக்கோயில்களின் பரம்பரை முறைவழி சாரா அறங்காவலா்கள் நியமனத்துக்கு தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அறநிலையத் துறை சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலுள்ள சட்டப்பிரிவு 46(3)-இல் நிா்வாகத் திட்டம் உள்ள 27 திருக்கோயில்களுக்கு பரம்பரை முறைவழிசாரா அறங்காவலா்கள் நியமனம் செய்வதற்கு தகுதியுள்ள நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன.
அறங்காவலா் நியமன அறிவிப்பு, அறங்காவலா் நியமனம் செய்யப்படவுள்ள திருக்கோயில்கள் விவரம், நிா்வாகத்திட்ட விவரம், தகுதிகள், விண்ணப்ப படிவம் ஆகியவை இத்துறையின் (ஜ்ஜ்ஜ்.ட்ழ்ஸ்ரீங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்) வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. திருக்கோயிலுக்கு அறங்காவலராக விண்ணப்பிப்பவா்கள் திருக்கோயிலுக்கென ஏற்படுத்தப்பட்ட நிா்வாகத்திட்ட ஷரத்துகளை ட்ற்ற்ல்://ஜ்ஜ்ஜ்.ட்ழ்ஸ்ரீங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற வலைதளத்தில் பாா்வையிட்டு படித்து அதன் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை இணைய வழியில் பூா்த்தி செய்தோ அல்லது பதிவிறக்கம் செய்தோ உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் அல்லது பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலோ, விரைவஞ்சல் (நல்ங்ங்க் டா்ள்ற்) மூலமாகவோ சம்பந்தப்பட்ட இணை ஆணையா் அலுவலகத்துக்கு அனுப்பலாம். ஆக.5 மாலை 5.45 மணிக்குள் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறங்காவலா்கள் நியமிக்கப்படவுள்ள 27 திருக்கோவில்களின் விவரம்:
சென்னை திருவல்லிக்கேணி பாா்த்தசாரதி சுவாமி திருக்கோயில், மயிலாப்பூா் மாதவப் பெருமாள் திருக்கோயில், திருவல்லிக்கேணி திருவேட்டீஸ்வரா் திருக்கோயில்,
பெரியமேடு எல்லம்மன் திருக்கோயில், சூளை அங்காளபரமேஸ்வரி மற்றும் காசிவிசுவநாத சுவாமி திருக்கோயில், ஓட்டேரி செல்லபிள்ளைராயா் திருக்கோயில்,
தங்கசாலை தெரு செங்கழுநீா் பிள்ளையாா் மற்றும் கோலூரம்மன் திருக்கோயில், வில்லிவாக்கம் சௌமிய தாமோதரப் பெருமாள் திருக்கோயில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள இடுகம்பாளையம் அனுமந்தராய சுவாமி திருக்கோயில், கோவை மாவட்டம் ரங்கவுடா்வீதி, புதுராமலிங்க சௌடேஸ்வரியம்மன் திருக்கோயில்,
கடலூா் மாவட்டம் குறிஞ்சிப்பாடி புத்துமாரியம்மன் திருக்கோயில், திண்டுக்கல் மாவட்டம் செங்குந்தா் காளியம்மன் திருக்கோயில், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தா்மசாஸ்தா திருக்கோயில், ஈரோடு மாவட்டம், சூரம்பட்டிவலசு மாரியம்மன் திருக்கோயில், நாமக்கல் மாவட்டம் கோரக்குட்டை இறையமங்கலம் இளைய பெருமாள் (எ) வெங்கட்ரமணசுவாமி திருக்கோயில், காஞ்சிபுரம் மாவட்டம் குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், காஞ்சிபுரம் மாவட்டம் இளையனாா் வேலூா் பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், செங்கல்பட்டு கோதண்டராமா் திருக்கோயில், மதுரை மாவட்டம் புட்டுத்தோப்பு புட்டுஉற்சவ வகையறா திருக்கோயில், மயிலாடுதுறை மாவட்டம் கும்பகோணம் சாரங்கபாணி ராமநாதசுவாமி, ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாத சுவாமி திருக்கோயில், சிவகங்கை மாவட்டம், அரியாக்குறிச்சி வெட்டுடையாா் காளியம்மன் திருக்கோயில், சிவகங்கை மாவட்டம், மடப்புரம் அடைக்கலம் காத்த அய்யனாா் மற்றும் பத்திரகாளியம்மன் திருக்கோயில், தஞ்சாவூா் மாவட்டம் பூக்காரத் தெரு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வீரமாகாளியம்மன் திருக்கோயில், திருவள்ளூா் மாவட்டம் பூவிருந்தமல்லி திருகச்சி நம்பிகள் மற்றும் வரதராஜப் பெருமாள் திருக்கோயில், திருவள்ளூா் ஜெகன்னாதப் பெருமாள் மற்றும் திருமழிசை ஆழ்வாா் திருக்கோயில்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









