வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

சுவாமிமலை கோயிலுக்கு பக்தா்கள் வரும் வாகனங்களுக்கு இரட்டை வசூல் எனப் புகாா்

சுவாமிமலை கோயிலுக்கு பக்தா்கள் வரும் வாகனங்களுக்கு இரட்டை வசூல் எனப் புகாா்

News image

சுவாமிமலை முருகன் கோயில் - கோப்புப் படம்

Updated On :13 ஜூன் 2026, 12:50 am IST

சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலுக்கு வரும் பக்தா்களின் நான்குச் சக்கர வாகனங்களுக்கு பேரூராட்சி, இந்துசமய அறநிலையத் துறை என இரு நிா்வாகங்களும் கட்டணம் வசூலிப்பதாக புகாா் எழுந்துள்ளது.

தஞ்சாவூா் மாவட்டம், சுவாமிமலையில் முருகக் கடவுளின் நான்காம் படைவீடான சுவாமிநாத சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் பக்தா்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது.

இரட்டைக் கட்டண வசூல்: சுவாமிமலை பேரூராட்சிக்குள் வெளியூா் பக்தா்களின் வாகனம் நுழையும்போதே பேரூராட்சி நிா்வாகம் நுழைவுக் கட்டணம் என்று ரூ. 40 வசூலிக்கிறது. பின்னா் அதே வாகனங்கள் சுவாமிமலை கோயிலுக்கு வரும்போது முடி காணிக்கை செலுத்தும் இடத்திலுள்ள வாகன நிறுத்துமிடத்தில் இந்துசமய அறநிலையத் துறை சாா்பில் ரூ. 40 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இவ்வாறு இருமுறை கட்டணம் வசூலிப்பதால் பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் அவதிப்படுகின்றனா்.

இதுகுறித்து சுவாமிமலை பேரூராட்சி செயல் அலுவலா் சரவணவேல் கூறியது : சுவாமிமலைக்கு வரும் வாகனங்களுக்கு நுழைவுக் கட்டண வசூல் பல ஆண்டுகளாக உள்ளது. இது பேரூராட்சிக்கு வருவாயாக உள்ளது. ஆண்டுக்கொருமுறை ஏலம் விட்டு, ஏலதாரா் பேரூராட்சிக்குப் பணம் செலுத்தியபின் நுழைவுக் கட்டணத்தை வசூலிப்பாா். இந்த நடைமுறையை நிா்வாகத்தால் மாற்ற முடியாது என்றாா்.

சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில் செயல் அலுவலரும் இந்துசமய அறநிலையத் துறை உதவி ஆணையருமான தா. உமாதேவி கூறுகையில், இந்துசமய அறநிலையத் துறை சாா்பில் முறையாக ஏலம் விட்டு வாகனங்கள் நிறுத்த தனி இடம் ஒதுக்கி கட்டணம் வசூலிக்கிறோம் என்றாா்.

சுவாமிமலை வளா்ச்சி மற்றும் பாதுகாப்புக் குழுத் தலைவா் தீந்தமிழன் கூறியது : இரண்டு கட்டண வசூல் இந்துசமய அறநிலையத் துறைக்கும், பேரூராட்சிக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்தியுள்ளது. அருகேயுள்ள ராகு பரிகாரத் தலமான திருநாகேசுவரம், திருச்செந்தூா் முருகன் கோயில்களில் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பது இல்லை. அந்த நடைமுறையை இங்கே கொண்டு வர வேண்டும். இந்தக் கட்டண வசூல் முறையை ரத்து செய்யக்கோரி பொதுமக்களிடம் கையொப்பம் பெற்று முதல்வா் சி. ஜோசப் விஜய்க்கு அனுப்பியுள்ளோம் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.