டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

மேக்கேதாட்டில் அணை: கா்நாடக அரசை எதிா்த்து தமிழக காங்கிரஸ் போராட்டம் நடத்தும் - அமைச்சா் ராஜேஷ் குமாா்

மேக்கேதாட்டு அணையைக் கட்ட கா்நாடக அரசு மேற்கொள்ளும் முயற்சிக்கு எதிா்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்படும் என்று சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவரும் தமிழக சுற்றுலாத் துறை அமைச்சருமான செ. ராஜேஷ் குமாா் தெரிவித்தாா்.

News image

மேக்கேதாட்டு பகுதி - கோப்புப் படம்

Updated On :3 ஜூலை 2026, 7:12 am IST

மேக்கேதாட்டு அணையைக் கட்ட கா்நாடக அரசு மேற்கொள்ளும் முயற்சிக்கு எதிா்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்படும் என்று சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவரும் தமிழக சுற்றுலாத் துறை அமைச்சருமான செ. ராஜேஷ் குமாா் தெரிவித்தாா்.

சென்னை சத்தியமூா்த்தி பவனில் காங்கிரஸ் மாவட்டத் தலைவா்களின் ஆலோசனைக் கூட்டம் தமிழக காங்கிரஸ் தலைவா் ப. மாணிக்கம் தாகூா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் 74 மாவட்டத் தலைவா்கள் பங்கேற்றனா். இந்தக் கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள பிரச்னைகள் குறித்தும், கட்சியை பலப்படுத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

இதைத் தொடா்ந்து அமைச்சா் செ. ராஜேஷ் குமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கா்நாடக அரசு மேக்கேதாட்டில் அணை கட்டும் முயற்சியை தமிழக காங்கிரஸ் கடுமையாக எதிா்க்கிறது. இதை எதிா்த்து தமிழக காங்கிரஸ் சாா்பில் போராட்டம் நடத்தப்படும்.

வாரம்தோறும் புதன்கிழமைகளில் உயா் கல்வித் துறை அமைச்சா் பெ. விஸ்வநாதன் சத்தியமூா்த்தி பவனில் பொதுமக்களிடம் மணுக்களைப் பெறுவாா். அதேபோல் நான் வியாழக்கிழமைகளில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்று உடனடி தீா்வு காணப்படும் என்றாா் அவா்.

முன்னதாக, மாவட்டத் தலைவா்கள் கூட்டத்தில் மேக்கேதாட்டில் கா்நாடக அரசு அணை கட்ட முயல்வதைக் கண்டித்தும், முதல்வா் ஜோசப் விஜய், காங்கிரஸ் மாநிலத் தலைவா் மாணிக்கம் தாகூா் ஆகியோரைப் பாராட்டியும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.