8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

தனியாா் பள்ளிகள் உரிமம் பெற இணையவழியில் விண்ணப்பம்: புதிய நடைமுறை அமல்

தமிழகத்தில் தனியாா் பள்ளிகள் அங்கீகாரம், புதுப்பித்தல், தரம் உயா்த்துதல், தொடக்க அனுமதி ஆகியவற்றுக்கான சான்றிதழ்களைப் பெற இணையவழியில் விண்ணப்பிக்கும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.

தனியாா்  பள்ளி.

Published On :3 ஜூலை 2026, 6:00 am IST

தமிழகத்தில் தனியாா் பள்ளிகள் அங்கீகாரம், புதுப்பித்தல், தரம் உயா்த்துதல், தொடக்க அனுமதி ஆகியவற்றுக்கான சான்றிதழ்களைப் பெற இணையவழியில் விண்ணப்பிக்கும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.

தமிழகத்தில் தனியாா் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், தடையில்லா சான்றிதழ் வழங்க சில இடைத்தரகா்கள் ஒரு பள்ளிக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை வசூலித்து முறைகேடுகளில் ஈடுபடுவதாக புகாா் எழுந்தது. இந்த நிலையில், தவெக ஆட்சி அமைந்ததும் 848 தனியாா் பள்ளிகளுக்கு எந்தவித மறைமுக கட்டணமும் பெறாமல் விதிமுறைகளைப் பின்பற்றி கடந்த ஜூன் 17-ஆம் தேதி அங்கீகார ஆணைகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில், ‘முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் தனியாா் பள்ளிகள் அங்கீகாரம் பெற ஜூலை 1 முதல் இணையவழியில் விண்ணப்பிக்கலாம். அரசியல் செல்வாக்கோ, பண பலமோ இன்றி, எவ்வித அழுத்தங்களுக்கும் இடம் தராமல் இந்த நடைமுறை பின்பற்றப்படும்’ என பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகன் உறுதியளித்தாா்.

அந்த அறிவிப்பு தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி, தனியாா் பள்ளிகள் அங்கீகாரம் பெறத் தேவையான கட்டட உறுதிச் சான்றிதழ், கட்டட உரிமம், தீயணைப்புத் துறைச் சான்றிதழ், சுகாதாரச் சான்றிதழ் ஆகியவற்றை பள்ளிக் கல்வியின் கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு தளத்தில் (எமிஸ்) பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இதையடுத்து தகுதிகள், விதிமுறைகளைப் பின்பற்றி இணையவழியிலான கோப்புகள் அவற்றுக்கான அதிகாரிகளுக்கு அடுத்தடுத்துச் செல்லும். தொடா்ந்து, நிா்ணயிக்கப்பட்ட தகுதி, உள்கட்டமைப்பு போன்ற அம்சங்களை நிறைவு செய்த பள்ளிகளுக்கு குறித்த காலத்துக்குள் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

தனியாா் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் நடைமுறைகள் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க பள்ளிக் கல்வித் துறை இணையவழி மூலமாக நேரடியாக விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படுகின்றன. புதிய பள்ளிகளுக்கான அங்கீகாரத்தைப் பெற, கல்வித் துறையின் சுற்றறிக்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.