ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஆணவப் படுகொலையைத் தடுக்க தனிச் சட்டம்! அமைச்சர் வன்னி அரசு

ஆணவப் படுகொலை குறித்து அமைச்சர் வன்னி அரசு பேசியது பற்றி...

A separate law to prevent honor killings; Minister Vanni Arasu

வன்னி அரசு - விஜய் - கோப்புப் படம்

Published On :6 ஜூலை 2026, 3:15 pm IST

ஆணவப் படுகொலையை தடுக்க தனிச்சட்டம் கொண்டுவர ஆலோசித்து வருவதாக சமூக நீதித் துறை அமைச்சர் வன்னி அரசு தெரிவித்தார்.

இதுபற்றி சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

"மயிலாடுதுறையில் நிகழ்ந்த கொலை சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆணவப் படுகொலை பற்றி சட்டப்பேரவையில் என் முதல் உரையிலேயே பேசியிருந்தேன். ஆணவப் படுகொலையைத் தடுக்க தனிச்சட்டம் தேவை என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். இதுபற்றி முதல்வர் விஜய்யுடன் பேசியிருக்கிறேன்.

நடப்பு கூட்டத்தொடரில் கண்டிப்பாக ஆணவப் படுகொலை பற்றி விவாதிக்கப்படும். அதுபற்றிய சட்ட மசோதாவை கொண்டுவர ஆலோசித்து வருகிறோம்.

ஏற்கெனவே இதற்காக நியமிக்கப்பட்ட நீதியரசர் கே.என். பாட்ஷா குழுவின் பரிந்துரைகளை ஏற்று கட்டாயம் விவாதிப்போம்.

ஆணவப் படுகொலைகளைத் தடுத்து நிறுத்துவதற்கு எல்லா முயற்சிகளையும் நாங்கள் எடுப்போம்" என்று கூறினார்.

Summary

A separate law to prevent honor killings: Minister Vanni Arasu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.