துப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ.டிராமா செய்கிறார் திமுக எம்.எல்.ஏ! - நிர்மல் குமார்டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 14 காசுகள் சரிந்து ரூ. 96.44 ஆக நிறைவு!சென்செக்ஸ் 443 புள்ளிகள் சரிவு; நிஃப்டி 24,250-க்குக் கீழே வர்த்தகம்!பேச்சுவார்த்தைக்கு பதிலாக வன்முறையைத் தேர்வு செய்த பாஜக: கனிமொழி விமர்சனம்திரிபுரா டிஜிபி அலுவலகத்திற்கு உள்ளேயே டிஜிபி மர்ம மரணம்! உண்ணாவிரதத்தை முடித்தார் அபிஜீத் தீப்கே! ஜெ.பி. நட்டாவுடன் சிஜேபி நிர்வாகிகள் சந்திப்பு! தில்லி போராட்டம்: நாடாளுமன்றத்தின் கதவு மூடல்! தயார் நிலையில் சிஐஎஸ்எஃப் வீரர்கள்!வன்முறையால் மாணவர்கள் குரலை ஒடுக்க முயற்சி! மாநிலங்களவையில் கார்கே கண்டனம்!
/

சேவூரில் விவசாயிகள் மீது போடப்பட்ட வன்கொடுமை வழக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சேவூரில் விவசாயிகள் மீது போடப்பட்ட வன்கொடுமை வழக்கை கண்டித்து புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்....

News image

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் - டிஎன்எஸ்

Updated On :8 ஜூலை 2026, 1:35 pm IST

அவிநாசி: சேவூர் அருகே ஒச்சாம்பாளையத்தில், நில விவகாரத்தில் விவசாயிகள் மீது போடப்பட்ட வன்கொடுமை வழக்கை கண்டித்து விவசாயிகள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அவிநாசி வட்டம், சேவூர் அருகே ஒச்சாம்பாளையம் நில விவகாரம் தொடர்பாக இருதரப்பினரிடையை நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஒரு தரப்பைச் சேர்ந்த விவசாயிகள் இருவர் மீது சேவூர் போலீஸா வன்கொடுமை வழக்குப்பதிவு செய்துள்ளது கண்டனத்துக்குரியது.

இந்த வன்கொடுமை வழக்கை திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேவூர் கைகாட்டி ரவுண்டான பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் ஏ.கே.சண்முகம் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ஈஸ்வரன், கிராமிய மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் சம்பத், வேட்டுவபாளையம் ஊராட்சி முன்னாள் தலைவர் கணேசன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், தீரன்சின்னமலை இளைஞர் பேரவையினர், பாதிக்கப்பட்ட விவசாய குடும்பத்தினர் என சேவூர், அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளை ஏராளமானோர் ஆர்ப்பட்டத்தில் பங்கேற்றனர்.

மேலும், விரைவில் வன்கொடுமை வழக்கை திரும்பப் பெறாவிட்டால், கடையடைப்பு, கால்நடை மற்றும் குழந்தைகளுடன் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனக் கூறி கலைந்து சென்றனர்.

Summary

Demonstration in Sevur condemning the atrocity case filed against farmers...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.