மெய்யான சமூக நீதி, நிலையான வளர்ச்சி, வேளாண்மை எழுச்சியே நம் இலக்கு: அண்ணாமலைதவெக அரசு இந்த ஆண்டு ரூ. 85 ஆயிரம் கோடி கடன் வாங்கப்போகிறது : அண்ணாமலைவீ தி லீடர்ஸ் அமைப்பின் இலக்கை 50% எட்டிவிட்டோம்: அண்ணாமலை2026 போல 2031-ல் ஆட்சி மாற்றம் நடக்கும்: அண்ணாமலை உறுதிஎதிர்க்கட்சி தூண்டுதலால் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்! அமைச்சர் விக்னேஷ்பாடகி ஜானகியின் மறைவு வருத்தமளிக்கிறது: ராகுல் காந்தி
/

அப்போலோவில் ரத்தப் பரிசோதனை மூலம் புற்றுநோய் கண்டறியும் வசதி!

ரத்தப் பரிசோதனை மூலம் புற்றுநோயை கண்டறியும் வசதி அப்போலோவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது தொடர்பாக...

News image

ஜைடஸ் லைஃப்சயின்சஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம். - படம்: அப்போலோ

Updated On :8 ஜூலை 2026, 2:55 pm IST

இந்தியாவில் கார்டன்ட் ஹெல்த் நிறுவனத்தின் ஷீல்ட்™ பலவகை புற்றுநோய் கண்டறியும் சோதனையை அறிமுகம் செய்த முதல் நிறுவனமாக அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் இணைந்துள்ளது.

இந்த ரத்தப் பரிசோதனை மூலம் புற்றுநோய் கண்டறியும் வசதியை அதிகப்படுத்த ஜைடஸ் லைஃப்சயின்சஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

புற்றுநோயை ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறிவது, நோயாளிகளின் உயிர்வாழ்வு விகிதத்தையும் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்துவதற்கான மிகச் சிறந்த வழியாகும்.

இந்த நிலையில், இந்தியாவின் முன்னணி மற்றும் பிரத்யேக விரிவான புற்றுநோய் சிகிச்சை அமைப்பான அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் (ACCs), 'சைடஸ் லைஃப்சயின்சஸ்' (Zydus Lifesciences) நிறுவனத்துடன் இன்று(ஜூலை 8) ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இதன் மூலம், துல்லியமான புற்றுநோய் சிகிச்சைக்கான நிறுவனமான 'கார்டன்ட் ஹெல்த்' (Nasdaq: GH) உருவாக்கியுள்ள, ஆய்வக அடிப்படையிலான 'ஷீல்டு™ மல்டி-கேன்சர் டிடெக்ஷன்' பரிசோதனை முறை இந்தியாவில் வழங்கப்படவுள்ளது.

இந்த மூலம், இந்தியாவிலேயே முதன்முறையாக இந்த அதிநவீனப் பரிசோதனைக்கான வாய்ப்பை வழங்கும் முதல் சுகாதாரப் பராமரிப்பு நிறுவனமாக ஏசிசிஸ் உருவெடுத்துள்ளது.

இது குறித்து அப்போலோ மருத்துவமனையின் நிர்வாகத் துணைத் தலைவர் டாக்டர் பிரீத்தா ரெட்டி கூறுகையில், “இந்தியாவில் 'ஷீல்டு மல்டி-கேன்சர் டிடெக்‌ஷன்' பரிசோதனை அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது, மருத்துவப் புதுமைகளை நோக்கிய ஒரு முக்கியமான படியாகும். இது இந்தியா முழுவதும் உள்ள மக்களுக்கு அதிநவீன பரிசோதனை தீர்வுகளைக் கிடைக்கச் செய்கிறது. நாடு முழுவதும் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை விகிதங்கள் குறைவாக உள்ள நிலையில், புற்றுநோயைத் தடுத்தல், பரிசோதனை செய்தல் மற்றும் ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறிவது குறித்த உரையாடல்களை மக்களிடையே முதன்மைப்படுத்தவும் இந்த சோதனை உதவும்”

ஷீல்டு எம்சிடி என்பது, புற்றுநோய் வருவதற்கான சாதாரண சராசரி அபாயம் கொண்ட 45 வயது அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுக்கு, மெத்திலேஷன் முறையில் ரத்தப் பரிசோதனை மூலம் பல வகையான புற்றுநோய்களைக் கண்டறியும் ஒரு சோதனை ஆகும். இதில் சிறுநீர்ப்பை, குடல், மார்பகம், புரோஸ்டேட், உணவுப்பாதை, இரைப்பை, கல்லீரல், நுரையீரல், கருப்பை மற்றும் கணையப் புற்றுநோய்கள் அடங்கும்” என்றார்.

Summary

An MoU has been signed with Zydus Lifesciences to expand the facility for cancer detection through blood tests.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.