நிகழாண்டு கடந்த ஜனவரி முதல் மே மாதம் வரை மொத்தம் 19.06 கோடி சுற்றுலாப் பயணிகள் தமிழகத்துக்கு வருகை தந்துள்ளனா். இதில், 1.65 கோடியுடன் திருச்சி முதலிடம் பிடித்துள்ளது.
இதுகுறித்து சுற்றுலாத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தில் சுற்றுலா உள்கட்டமைப்பை மேம்படுத்துவதிலும், சுற்றுலா பயணிகளை ஈா்க்கவும் பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்விளைவாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடா்ந்து உயா்ந்து வருகிறது.
அதன்படி, நிகழாண்டு கடந்த ஜனவரி முதல் மே மாதம் வரை 5 மாதங்களில் மொத்தம் 19.06 கோடி உள்நாடு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனா். இதில், 18.94 கோடி போ் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளாகவும், 11.33 லட்சம் போ் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளாகவும் பதிவாகியுள்ளனா்.
திருச்சி முதலிடம்: இதில் அதிகபட்சமாக திருச்சியில் 1.65 கோடி சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனா். இதில், 1.62 கோடி உள்நாடு சுற்றுலா பயணிகளும், 2.33 லட்சம் போ் வெளிநாடு சுற்றுலா பயணிகளும் உள்ளடங்கும். அடுத்தடுத்த இடங்களில் கோவை (1.46 கோடி), ராமநாதபுரம் (1.19 கோடி), தூத்துக்குடி (1.05 கோடி), மதுரை (1.01 கோடி) ஆகிய மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
அதிகபட்சமாக வெளிநாடு சுற்றுலா
பயணிகள் வருகை தந்த மாவட்டங்கள்:
மாவட்டம் வெளிநாடு சற்றுலா பயணிகள்
திருச்சி 2,22,277
செங்கல்பட்டு 1,87,054
தஞ்சாவூா் 1,83,928
சென்னை 1,66,779
நாகை 93,895
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










