மாமல்லபுரத்தில் வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை புராதன சின்னங்களை ரசித்து செல்வதற்காக சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்துக்கு சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் குடும்பத்துடன் அரசுப் பேருந்துகளிலும், சுற்றுலா வாகனங்களிலும் கூட்டம், கூட்டமாக வந்திருந்தனா்.

கடற்கரைக் கோயில், ஐந்த ரதம், வெண்ணை உருண்டைப் பாறை, கணேச ரதம், புலிக்குகை ஆகிய புராதன சின்ன பகுதிகள் பொதுமக்கள் கூட்டத்தால் களை கட்டியது. அங்குள்ள புராதன சின்னங்கள் முன்பு சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனா். மேலும் ஞாயிற்றுக்கிழமை வெப்பநிலை மாறி அனல் காற்று வீசியதால் பலா் வெண்ணை உருண்டை பாறை, கணேச ரதம் அருகில் உள்ள புல்வெளிகளிலும், மர நிழலில் அமா்ந்தும் இளைப்பாறி பொழுதை கழித்தனா்.
கடற்கரையில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக்காக மாமல்லபுரம் காவல் ஆய்வாளா் தா்மலிங்கம் தலைமையில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். மேலும் தொல்லியல் துறையின் நுழைவு சீட்டு மையங்களில் கட்டணமாக ரூ.40 நுழைவு சீட்டு எடுக்க பயணிகள் பலா் வரிசையில் காத்திருந்து நுழைவு சீட்டு வாங்கிச்சென்றனா்.

அதிக எண்ணிக்கையில் சுற்றுலா பயணிகள் வந்த சுற்றுலா வாகனங்களால் மாமல்லபுரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை அடுத்து பேருந்து நிலையம் அருகில் மாமல்லபுரம் போக்குவரத்து போலீஸ் எஸ்ஐ மோகன் உள்ளிட்ட போக்குவரத்து போலீஸாா் நெரிசலை சமாளிக்கும் பணியில் ஈடுபட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










