திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் காரும் லாரியும் மோதிய விபத்தில் 6 பேர் பரிதாபமாகப் பலியாகினர்.
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வழியாக, விஜயமங்கலம் நோக்கி கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது.
அப்போது விஜயமங்கலத்தில் இருந்து ஊத்துக்குளி வந்து கொண்டிருந்த டீசல் டேங்கர் லாரியும் அந்த காரும் காக்காபள்ளம் அருகில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் 2 பெண்கள், 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர்.
படுகாயம் அடைந்த பெண் ஒருவர் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓட்டிவிட்ட நிலையில், விபத்து குறித்து ஊத்துக்குளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Summary
Six people tragically lost their lives in a collision between a car and a lorry in Uthukuli, Tiruppur district.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








