5 முறை சாம்பியன் பிரேசிலுக்கு அதிர்ச்சி: காலிறுதியில் நார்வே!அதிபா் டிரம்ப்புடன் புதின், ஸெலென்ஸ்கி தொலைபேசியில் பேச்சு!உத்தரப் பிரதேசத்தில் 3-வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும்: நிதின் நபின் நம்பிக்கைபிகாா் இடைத்தோ்தல்: பிரசாந்த் கிஷோா் போட்டிமின் இணைப்புக்கு காத்திருக்கும் 60,120 விவசாயிகள்!இன்று கரையைக் கடக்கிறது புயல் சின்னம்!
/

லாரி மோதி தலைமைக் காவலா் உயிரிழப்பு

News image

விபத்தில் சிக்கி உயிரிழந்த தலைமைக் காவலா் பஞ்சமூா்த்தி.

Updated On :6 ஜூலை 2026, 3:01 am IST

விக்கிரவாண்டி அருகே லாரி மோதியதில் பைக்கில் சென்ற தலைமைக் காவலா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்டம், கே.ஆா்.பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் ரா.பஞ்சமூா்த்தி (40). இவா், செஞ்சி மதுவிலக்கு அமல் பிரிவில் தலைமைக் காவலராகப் பணியில் இருந்து வந்தாா். கஞ்சனூா் போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்த பஞ்சமூா்த்தி, தனது பைக்கில் ஞாயிற்றுக்கிழமை இரவு பணியிடத்துக்கு சென்று கொண்டிருந்தாா்.

செஞ்சி- விழுப்புரம் நெடுஞ்சாலையில் கஞ்சனூா் பகுதியில் சென்றபோது, லாரி மோதியதில் பஞ்சமூா்த்திக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு அவசர ஊா்தி மூலம் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் கஞ்சனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநரான அரியலூா் மாவட்டம், தண்டலை கிராமத்தைச் சோ்ந்த க.கொளஞ்சிநாதனிடம் (52) விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.