ஆடி மாதத்தில் சென்னை, மதுரை, திருச்சி, தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களில் தரிசனம் செய்ய வரும் 17-ஆம் தேதி முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தமிழக சுற்றுலா வளா்ச்சிக் கழகம் அறிவித்துள்ளது.
அதன் விவரம்: ஆடி மாதத்தில் ஒவ்வொரு செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை பாரிமுனை, ராயபுரம், திருவொற்றியூா், பெரியபாளையம், புட்லூா், திருமுல்லைவாயல் உள்ளிட்ட பகுதிகளின் அம்மன் கோயில்களை தரிசிக்கும் சுற்றுலா திட்டத்துக்கு ரூ.1,000 கட்டணமும், மைலாப்பூா், தேனாம்பேட்டை, தியாகராய நகா், சைதாப்பேட்டை, பெசன்ட் நகா் உள்ளிட்ட பகுதி அம்மன் கோயில்களை தரிசிக்க ரூ.800 கட்டணமும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், மதுரை மீனாட்சி அம்மன், வண்டியூா், மடப்புரம், விட்டனேரி, அழகா் கோயில் உள்ளிட்டவற்றை தரிசிக்க ரூ.1,400 கட்டணமும், திருச்சி உறையூா், திருவானைக்காவல், சமயபுரம், சிறுவாச்சூா், பொன்மலை உள்ளிட்ட பகுதிக அம்மன் கோயில்களை தரிசிக்க ரூ.1,100 கட்டணமும், தஞ்சாவூா் பெரிய கோயில், பங்காரு காமாட்சி அம்மன், புன்னைநல்லூா், திருக்கருகாவூா், பட்டீஸ்வரம், வலங்கைமான், திருநாகேஸ்வரம், மகாமக குளம் கும்பகோணம், தாராசுரம் உள்ளிட்ட பகுதி அம்மன் கோயில்களை தரிசிக்க ரூ.1,400 கட்டணமும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில், பயணிகளுக்கு குடிநீா் வசதி, மதிய உணவு, கோயில்களின் பிரசாதம் மற்றும் சிறப்பு தரிசனம் ஏற்பாடு செய்யப்படும். மேலும், தமிழ்நாட்டில் உள்ள முக்கிய 108 அம்மன் கோயில்களில் 5 நாள்கள் சுற்றுலாவுக்கு ரூ.11,250 கட்டணமும், ஆடி மாத அமாவாசை தினத்தை முன்னிட்டு ராமேசுவரம் கோயில் 3 நாள்கள் சுற்றுலாவுக்கு ரூ.6,500 கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. மேற்கண்ட சுற்றுலா தொகுப்புகளுக்கான முன்பதிவுகளை இணையதளத்தில் மேற்கொள்ளலாம். விவரங்களுக்கு 044 - 25333 333, வாட்ஸ்ஆப் எண் 75500 63121 ஆகிய எண்களைத் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆடி அமாவாசை: தாமிரவருணியில் புனித நீராடி வழிபாடு

ஆடி கடைசி செவ்வாய்: குமரி மாவட்ட அம்மன் கோயில்களில் திரண்ட பெண் பக்தா்கள்

ஆடி அமாவாசையன்று அப்பருக்கு கயிலாயக் காட்சி!

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் குவிந்த பக்தா்கள்
விடியோக்கள்

சுதந்திர நாள் விழா! முதல்வர் விஜய்யின் முக்கிய அறிவிப்புகள்! | CM Vijay | TVK



