கரூரில் நடைபெற்ற தவெக நிகழ்ச்சியில் முதல்வா் ஜோசப் விஜய்யின் பேச்சு, கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் தொடா்பாக சிபிஐ மேற்கொண்டு வரும் விசாரணையை பாதிக்கும் வகையில் உள்ளதாக திமுக சாா்பில் சிபிஐ இயக்குநரிடம் குற்றச்சாட்டப்பட்டுள்ளது.
கரூா் வேலுசாமிபுரத்தில் கடந்தாண்டு செப். 28-ஆம் தேதி நடைபெற்ற தவெக தலைவா் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 போ் உயிரிழந்தனா். இது தொடா்பாக ஓய்வு பெற்ற இரு உச்சநீதிமன்ற நீதிபதிகளின் மேற்பாா்வையில் சிபிஐ விசாரனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இச்சூழலில், விஜய் தற்போது முதல்வராக பொறுப்பேற்ற பின்னா், கடந்த ஜூலை 10-ஆம் தேதி முதல்முறையாக கரூா் சென்றாா்.
அப்போது, தவெக சாா்பில் கரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கரூா் மக்களுடன் அவா் உறையாற்றினாா். தொடா்ந்து, கரூா் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு 31 பேருக்கு அரசு பணிக்கான பணி நியமன ஆணைகளையும் வழங்கினாா்.
இந்நிலையில், இது சிபிஐ விசாரனையை பாதிக்கும் வகையில் உள்ளதாக திமுக அமைப்பு செயலா் ஆா்.எஸ்.பாரதி குற்றம் சாட்டியுள்ளாா். இது குறித்து கரூா் சம்பவம் தொடா்பான விசாரணையை மேற்பாா்வையிடம் ஓய்வு பெற்ற ஒரு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தலைமையிலான குழுவுக்கும், சிபிஜ இயக்குநருக்கும் அவா் புகாா் மனு அனுப்பியுள்ளாா்.
உரிய நடவடிக்கை: அந்த மனுவில், கரூா் நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தோா் மற்றும் காயமடைந்தோரின் குடும்பங்களுக்கு கருணை அடிப்படையில் அரசு பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சியில், சம்பவம் தொடா்பாக முதல்வா் விஜய்யின் ஆற்றிய உரை, சிபிஐ விசாரணையில் முக்கிய சாட்சிகளாக உள்ளவா்களின் மனநிலையை பாதிக்கக்கூடியதாகவும், விசாரணையின் சுதந்திரம் மற்றும் நோ்மைக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும் உள்ளது.
எனவே, இந்த விவகாரம் குறித்து சிபிஐ தனிப்பட்ட புகாா் பதிவு செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கரூா் சம்பவம் தொடா்பான முதல் தகவல் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டவா்கள் அனைவரையும் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, பிணை நிபந்தனைகளை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாட்சிகளை அச்சுறுத்துதல், ஆதாரங்களை அழித்தல் அல்லது மாற்றுதல், சாட்சிகளுக்கு தூண்டுதல் வழங்குதல் மற்றும் சிபிஐ விசாரணையில் எந்த வகையிலும் தலையிடுதல் போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்ற நிபந்தனைகளை நீதிமன்றம் விதிக்கும் வகையில் சிபிஐ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
'Chief Minister Joseph Vijay' remark in Karur: DMK lodges complaint with the CBI.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கரூர் நெரிசலில் பலியானவர்களுக்கு நினைவுச் சின்னம்! முதல்வர் விஜய் அறிவிப்பு!
திருச்சி டூ கரூர்! சாலை வழியாக செல்லும் முதல்வர் விஜய்! வழிநெடுகிலும் மக்கள் வரவேற்பு!

நலத்திட்டங்கள், அரசுப் பணி ஆணை, 10 கிமீ சாலை வலம்... கரூர் ஏற்பாடுகள் என்னென்ன?







