தமிழகத்தின் முழு நேர ஆளுநராக ஆர்.வி. அர்லேகர் நியமனம்!தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம் இந்திய வரலாற்றில் இடம்பெறும்: வி.டி. சதீசன்இந்தியா கூட்டணி போராட்டத்தில் திமுக ஏன் பங்கேற்க வேண்டும்? காங்கிரஸுக்கு திமுக கேள்விஅரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருள்களின் விலை உயர்வு உருவாக்கப்பட்ட பிம்பமா? - டிடிவி தினகரன்99 தேர்தல்களில் தோற்ற பிறகு... தோல்விக்கு காரணம் தேடுகிறார் ராகுல்! அனுராக் தாக்குர்அனுமதி கோரிய 30 நிமிடத்தில் ஜந்தர் மந்தர் போராடுவதற்கான இடமில்லை என அறிவிப்பு! - சிஜேபிபிரதமரின் பிரச்னை போராட்டக் களம் அல்ல, போராடும் மனம்; ஜனநாயகமும் நீக்கப்படும் - அபிஜீத் தீப்கேஉச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணி!

தவெக ஆட்சி முடியும்போது ரூ. 15 லட்சம் கோடி கடன் இருக்கும்: அண்ணாமலை!

தவெக அரசு இந்த ஆண்டு 85 ஆயிரம் கோடி கடன் வாங்கப்போகிறது என அண்ணாமலை பேசியது குறித்து...

joseph vijay / we the leaders Annamalai

முதல்வர் சி. ஜோசப் விஜய் / அண்ணாமலை - எக்ஸ்

Published On :

தமிழக வெற்றிக் கழக ஆட்சி முடியும்போது தமிழக அரசின் கடன் ரூ. 15 லட்சம் கோடியாக இருக்கும் என அண்ணாமலை இன்று (ஜூலை 12) தெரிவித்தார்.

தவெக அரசு இந்த ஆண்டு 85 ஆயிரம் கோடி கடன் வாங்கப்போகிறது என்றும் அனுபவமற்றவர்கள் என்பதால் தவெக அரசை விமர்சிக்காமல் தூக்கிப்பிடிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

மாநாட்டில் தவெக ஆட்சி நிர்வாகம் மற்றும் தமிழ்நாட்டின் நிதிநிலைமை குறித்து அண்ணாமலை பேசியதாவது:

''தவெக அரசு ஒவ்வொரு ஆண்டும் ரூ. 80 ஆயிரம் கோடிக்கும் குறைவாக கடன் வாங்காது. இந்த ஆண்டு 85 ஆயிரம் கோடி கடன் வாங்கப்போகிறது.

தவெக அரசு முடியும்போது ரூ. 15 லட்சம் கோடி கடன் இருக்கும். தமிழ்நாட்டில் ஒரு குடும்ப அட்டை மீதான கடன் ரூ. 4.44 லட்சமாக உள்ளது.

மெய்யான சமூக நீதி, நிலையான வளர்ச்சி, வேளாண்மை எழுச்சி என்பதே வீ தி லீடர்ஸ் அமைப்பின் இலக்கு.

என் மண், என் மக்கள் தொழிற்சங்க பேரவை தொடங்கியுள்ளோம். அதில் பலர் இணைய வேண்டும். உள்ளாட்சி பிரதிநிதிகள் தன்னெழுச்சியோடு வீ தி லீடர்ஸ் அமைப்பில் சேர்கின்றனர்.

பாஜகவில் இருந்து விலகிய பிறகு இஸட் பிளஸ் பாதுகாப்பு வேண்டாம் எனக் கூறிவிட்டேன். திரும்பப் பெற்றுக்கொள்ள கோரிக்கை வைத்துள்ளேன். நான் சுதந்திரமாக மக்களுடன் பேசிப் பழக வேண்டும் என நினைக்கிறேன்.

அடுத்த 6 மாதங்களுக்கு மரம் நடுதல், நதிகளை தூய்மைப்படுத்துதல் உள்ளிட்ட 6 முக்கிய பிரச்னைகளுக்காக களமாடுவோம்.

தமிழ்நாட்டில் 5,200 டாஸ்மாக் கடைகள் உள்ளன. தமிழ்நாடு முழுவதும் மது நிறைந்துள்ளது. அனைத்து பாலியல் குற்றங்களுக்குப் பின்னணியிலும் மது உள்ளது.

ஓராண்டுக்கு தவெக அரசுக்கு கோரிக்கைகளை மட்டுமே வைப்போம். செவிசாய்க்கவில்லை என்றால் அடுத்தகட்ட நடவடிக்கை.

கோவில் நிலத்தை வைத்து ஆக்கிரமிப்பு என்ற பெயரில் திமுக அரசியல் செய்தது. வீ தி லீடர்ஸ் அமைப்பு ஒருபோதும் அற்ப அரசியல் செய்யாது.

ஜூலை 26 ஆம் தேதி திருச்செந்தூரில் அடுத்த மாநாடு நடக்கவுள்ளது'' எனக் குறிப்பிட்டார்.

Summary

By the time the TVK government's term ends, the debt will stand at ₹15 lakh crore we the leaders Annamalai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.