லண்டனிலிருந்து சென்னை வந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தின் மீது இன்று அதிகாலை பறவை மோதியது.
பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தைச் சேர்ந்த விமானம், இன்று அதிகாலை லண்டனிலிருந்து சென்னைக்கு வந்துள்ளது. இந்த விமானம் தரையிறங்கும்போது விமானத்தின் முன்பகுதியில் பறவை மோதியுள்ளது.
இதனிடையே, எவ்வித பாதிப்புமின்றி விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டு, பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.
தொடர்ந்து, விமானத்தில் பறவை மோதிய பகுதியில் தொழில்நுட்பக் குழுவினர் இரண்டு மணிநேரத்துக்கு மேலாக ஆய்வு மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, மீண்டும் லண்டன் புறப்படவிருந்த அந்த விமானத்தின் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த விமானத்தில் புறப்படவிருந்த 202 பயணிகள் ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
முழு ஆய்வுக்குப் பிறகு, பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பின்னரே விமானம் இயக்கப்படும் என்று பிரிட்டிஷ் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது.
Summary
A bird struck a plane landing in Chennai!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











