லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம்பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!

முதல்வர் விஜய் திறந்து வைத்த பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகம்.

News image
Updated On :13 ஜூலை 2026, 4:30 pm IST

சென்னை பெரம்பூர் தொகுதியில் சர்மா நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள எம்எல்ஏ அலுவலகத்தை முதல்வர் சி. ஜோசப் விஜய் திறந்து வைத்தார்.

முதல்வராகப் பதவியேற்றப் பிறகு, முதல்முறையாக தனது சொந்த தொகுதியான பெரம்பூர் தொகுதிக்கு சென்ற முதல்வர், சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்தையும் முதல்வர் விஜய் திறந்து வைத்தார்.

தொடர்ந்து, சர்மா நகர் 10ஆவது தெருவில் உள்ள நியாய விலைக் கடையினைப் பார்வையிட்டு, பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டையினை வழங்கினார்.

பெரம்பூர் தொகுதிக்கு கொண்டுவரப்படவுள்ள ரூ. 100 கோடி மதிப்பிலான திட்டங்கள் குறித்து முதல்வர் விஜய், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து, தனது சொந்த தொகுதி மக்களின் குறைகளை கேட்டறிவதற்காக, பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள செல்போன் செயலிலையும் அறிமுகப்படுத்தவுள்ளார்.

நடந்து முடிந்த பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிட்ட தவெக தலைவர் விஜய், இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். இதில், திருச்சி கிழக்குத் தொகுதி எம்எல்ஏ பதவியை அவர் ராஜிநாமா செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Chief Minister C. Joseph Vijay inaugurated the newly constructed MLA office in Sharma Nagar, within the Chennai Perambur constituency.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.