சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு மாணவர்களுக்காக முதலில் குரல் கொடுத்தவர் ராகுல் காந்தி: கார்கேமோஜ்தபா கமேனி கவலைக்கிடமா? விடியோ வெளியிட்ட ஈரான்!குடும்ப அட்டைதாரர்கள் விரல்ரேகை பதிவு செய்ய இன்றே கடைசி!தொகுதி மறுவரையறையை நிராகரிக்க காரணம் என்ன? மாணிக்கம் தாகூர் விளக்கம்மகாராஷ்டிரத்தில் நில அதிர்வு: வீடுகளில் விரிசல்; மக்கள் அச்சம்செப். 1 முதல் கோயில்களில் செல்போன்கள் கொண்டுச் செல்லத் தடை! - அமைச்சர் ரமேஷ்
/

கிருஷ்ணகிரியில் வீட்டுக்குள் புகுந்து நடனமாடிய சாரைப் பாம்புகள்!

கிருஷ்ணகிரியில் வீட்டுக்குள் சாரைப் பாம்புகள் புகுந்த சம்பவம் பற்றி...

News image

கிருஷ்ணகிரியில் வீட்டுக்குள் புகுந்த சாரைப் பாம்புகள். - படம் - தினமணி

Updated On :13 ஜூலை 2026, 7:06 pm IST

கிருஷ்ணகிரியில் வீட்டுக்குள் புகுந்த சாரைப்பாம்புகள் நடனமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி சத்யசாய் நகர் பகுதியை சேர்ந்தவர் சாகுல் ஹமீது (ஓய்வு பெற்ற ராணுவ வீரர்) இவரது வீட்டில் திடீரென இரண்டு சாரைப் பாம்புகள் வீட்டுக்குள் புகுந்தன. பின்னர் சிறிது நேரத்தில் இரண்டு சாரைப் பாம்புகளும் ஒன்றுடன் ஒன்று பின்னி நடனம் ஆடத் தொடங்கின.

இதைக் கண்ட சாகுல் ஹமீது குடுபத்தினர் அலறியடித்து வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். பின்னர், உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து நிகழ்விடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு மீட்புப் படை வீரர்கள் சுமார் 7 அடி நீளமுள்ள இரண்டு பாம்புகளைப் பிடிக்க முயன்றனர். இதில் ஒரு பாம்பு பிடிபட்ட நிலையில் மற்றொன்று தப்பி ஓடியது.

தப்பி ஓடிய பாம்பை தீயணைப்பு படை வீரர்கள் பிடிக்க முயன்ற போது, வீட்டின் வாசல் படிக்கட்டின் கீழ் மறைந்திருந்த அதிக விஷத்தன்மை கொண்ட கட்டு விரியன் பாம்பைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து அந்தக் கட்டுவிரியன் பாம்பையும் பிடித்தனர். பிடிபட்ட பாம்புகளை தீயணைப்புப் படை வீரர்கள் வனத்துறையினிடம் ஒப்படைத்தனர்.

Summary

An incident in Krishnagiri, where rat snakes entered a house and engaged in a 'dance', has caused a stir.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.