மதுரையில் வாகன விபத்தில் பலியானோருக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் விஜய் அவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையையும் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது:
மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், கொட்டாம்பட்டி அருகே இன்று (ஜூலை 13) அதிகாலை சென்னையிலிருந்து மார்த்தாண்டம் நோக்கிச் சென்ற தனியார் பேருந்து, மதுரையிலிருந்து கும்பகோணம் நோக்கி வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்து மீது மோதிய விபத்தில், பேருந்தில் பயணம் செய்த திருநெல்வேலி சமாதானபுரத்தைச் சேர்ந்த சிறியபுஷ்பம் (56), இடையமலைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜ் (46), திருச்சியைச் சேர்ந்த சூர்யா (29), திருவாரூர் கூத்தாநல்லூர் பகுதியைச் சேர்ந்த முகமது யாசின் (60), திருநெல்வேலி திசையன்விளை பகுதியைச் சேர்ந்த ஆபிரகாம் (40) ஆகியோர் விபத்து நடந்த இடத்திலேயே பலியாகினர்.
மேலும், மதுரை, வஞ்சி நகரத்தைச் சேர்ந்தபெருமாள் (71) என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பலியானார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
இந்த விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நபர்களுக்கும், இலேசான காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் 15 நபர்களுக்கும் சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன்.
இந்த விபத்தில் பலியான ஆறு நபர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சமும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஏழு நபர்களுக்கு தலா ரூ. ஒரு லட்சமும், லேசான காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 15 நபர்களுக்கு தலா ரூ. 50,000-ம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன் என்று முதல்வர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.
Summary
The Chief Minister has expressed condolences to the families of those who lost their lives in a vehicle accident in Madurai and has also announced relief assistance for Vijay's family.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வியத்நாம் படகு விபத்து: முதல்வர் விஜய் இரங்கல்!

வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்!

பண்ருட்டி அருகே விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி: முதல்வா் விஜய் உத்தரவு







