அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!தவெக எம்எல்ஏவிடம் பேரம்! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி மனு!வயநாட்டில் நிலச்சரிவு! சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்! முதல்வர் கரூர் செல்ல தடையில்லை! திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்பிரதமர் மோடிக்கு 35-வது சர்வதேச விருது! இந்தோனேசியா வழங்கியது! அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம்
/

பண்ருட்டி: டிராக்டர் மீது மினி லாரி மோதிய விபத்தில் 4 பேர் பலி; முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

டிராக்டர் மீது மினி லாரி மோதிய விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் நிவாரணம் அறிவித்தது பற்றி...

News image

முதல்வர் விஜய். - கோப்புப் படம்

Updated On :7 ஜூலை 2026, 4:37 pm IST

பண்ருட்டி அருகே டிராக்டர் மீது மினி லாரி மோதிய விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் விஜய் நிவாரணத் தொகையையும் செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது:

கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், பணிக்கன்குப்பம் கிராமம் அருகே கும்பகோணம் சாலையில் கடந்த ஜூலை 5 அன்று காலை மருங்கூர் கிராமத்திலிருந்து பண்ருட்டி நோக்கி முந்திரிக் கட்டைகளை ஏற்றி வந்த டிராக்டரை, பின்னால் தொடர்ந்து வந்த மினி லாரி பின்புறமாக மோதி விபத்துக்குள்ளாகின. மினி லாரியில் வேலைக்குச் சென்று கொண்டிருந்த குறிஞ்சிப்பாடி வட்டம், வெங்கடாம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த சத்யா (31). செல்வராணி (58), மற்றும் கீழுர் மதுரா, ஆயிப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த காந்திமதி (60), ரவிச்சந்திரன் (58) ஆகியோர் பலத்த காயமடைந்து பலியாகினர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையுமடைந்தேன்.

இவ்விபத்தில், படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள உக்கரவேல் (48), சந்தோஷ் (37), தேவகி (50), அஞ்சலை (60), சதீஷ் (35), விஜயா (35), சந்திரகுமார் (35) ஆகிய ஏழு நபர்களுக்கும் மற்றும் இலேசான காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அம்மாவாசை (50) என்பவருக்கும் சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்விபத்தில் பலியான நான்கு நபர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சமும், இவ்விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நபர்களுக்கு தலா ரூ. 1 லட்சமும், லேசான காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபருக்கு ரூ. 50,000-ம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று முதல்வர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.

Summary

Chief Minister Vijay has expressed his condolences to the families of those who died in an accident where a mini-lorry collided with a tractor near Panruti, and also announced relief assistance on Tuesday (July 7).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.