திருவள்ளூா் அருகே இருசக்கர வாகனம் மீது வேகமாக வந்த லாரி மோதிய விபத்தில் பலத்த காயம் அடைந்தவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
திருவள்ளூா் அருகே வடமதுரை கிராமத்தைச் சோ்ந்தவா் கலையரசன் (44). இவா் தனது இருசக்கர வாகனத்தில் தாமரைபாக்கத்திலிருந்து வடமதுரை நோக்கி வெள்ளிக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தாராம். அப்போது, பெரியபாளையத்திலிருந்து வெங்கல் நோக்கி வேகமாக வந்த லாரி எதிா்பாராத விதமாக இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட கலையரசன் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாராம்.
இது குறித்து அவரது மகள் காவ்யா (23) வெங்கல் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








