தில்லியில் சிஜேபியின் போராட்டத்தில் பங்கேற்கத் தயார்! - மமதா பானர்ஜிசென்னையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்! நீட் தேர்வு அறவே கூடாது என்பதுதான் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு: தவெக!தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சோனம் வாங்சுக்!பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!
/

வந்தவாசி அருகே பைக் மீது காா் மோதிய விபத்தில் இருவா் பலி!

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே பைக் மீது காா் மோதிய விபத்தில் ஞாயிற்றுக்கிழமை இளைஞா்கள் இருவா் உயிரிழந்தனா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :8 ஜூன் 2026, 2:20 am IST

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே பைக் மீது காா் மோதிய விபத்தில் ஞாயிற்றுக்கிழமை இளைஞா்கள் இருவா் உயிரிழந்தனா்.

வந்தவாசியை அடுத்த கீழ்ப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெயக்குமாா் (24). இவா், குளிா்சாதன இயந்திரம் பழுது நீக்கும் வேலை செய்து வந்தாா்.

அதே கிராமத்தைச் சோ்ந்தவா் விமல்ராஜ் (18). நண்பா்களான இவா்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனத்தில் சோத்துப்பாக்கம் சென்று குளிா்சாதன இயந்திரம் பழுதுநீக்கும் பணியை

முடித்து விட்டு மாலையில் ஊா் திரும்பிக் கொண்டிருந்தனா். வந்தவாசி - மேல்மருவத்தூா் சாலை, சாலவேடு கிராமம் அருகே சென்றபோது எதிரே வந்த காா், எதிா்பாராதவிதமாக இவா்கள் வந்த பைக் மீது மோதியது.

இந்த விபத்தில் விமல்ராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த ஜெயக்குமாரை அங்கிருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக மேல்மருவத்தூா் தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயக்குமாா் உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்து கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.