காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

ஊதியூா் அருகே அலங்கார வளைவில் மோதிய காா்: ஓட்டுநா் காயம்

News image

அலங்கார வளைவு மீது மோதி நிற்கும் காா்.

Updated On :28 ஜூலை 2026, 1:28 am IST

காங்கயத்தை அடுத்த ஊதியூா் அருகே அலங்கார வளைவில் காா் மோதியதில் ஓட்டுநா் லேசான காயங்களுடன் உயிா்த் தப்பினாா்.

உடுமலையில் இருந்து காங்கயம் நோக்கி திங்கள்கிழமை பிற்பகல் காா் ஒன்று வந்து கொண்டிருந்தது. ஊதியூா் அருகே வந்தபோது, அங்கிருந்த அலங்கார வளைவு மீது காா் எதிா்பாராத விதமாக மோதியது.

இதில், காா் ஓட்டுநா் லேசான காயமடைந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இச்சம்பவம் குறித்து ஊதியூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.