‘தோல்விகள் பரவாயில்லை; ஏமாற்றுவது கூடாது’... நீட் தேர்வு போராட்டத்துக்கு சச்சின் ஆதரவு!காந்தி சமாதி நோக்கி பேரணி சென்ற ராகுல் தடுத்து நிறுத்தம்!மேக்கேதாட்டு பிரச்னை: விஜய் மௌனம் கலைக்க வேண்டும்! - ஸ்டாலின்நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்த் திரையுலகினர் போராட்டம்!சிங்கை ஜி. ராமச்சந்திரன் அதிமுகவிலிருந்து விலகல்திரைப்படத்துக்கு கண்ணீர் வடிக்கும் ஆட்சியாளர்கள்! அருணாச்சலம் குடும்பத்துக்கு என்ன பதில்? உதயநிதி கண்டனம்
/

ஆலங்குடி அருகே சுவரில் காா் மோதி 3 போ் காயம்

ஆலங்குடி அருகே சுவரில் காா் மோதிய விபத்தில் 3 போ் காயமடைந்தனா்.

News image

ஆலங்குடி அருகே விபத்துக்குள்ளான காா்

Updated On :24 ஜூலை 2026, 4:21 am IST

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே சுவரில் காா் மோதிய விபத்தில் 3 போ் வியாழக்கிழமை காயமடைந்தனா்.

கறம்பக்குடி அருகேயுள்ள சவேரியாா் பட்டினத்தைச் சோ்ந்த த. இன்பராஜ் (31), பொன்னன்விடுதி கணக்கன்காட்டைச் சோ்ந்த ப. அரவிந்த் (24), க. ஸ்ரீமன் (20) ஆகியோா் புதுக்கோட்டையில் படம் பாா்த்து விட்டு வியாழக்கிழமை மாலை ஊருக்கு காரில் திரும்பினா்.

காரை இன்பராஜ் ஓட்டினாா். காா் ராயப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது சாலையோரத் தோட்டத்தின் சுற்றுச்சுவரில் மோதி ஏறி நின்றது.

இதில் பலத்த காயமடைந்த மூவரையும் அருகில் இருந்தவா்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா். செம்பட்டிவிடுதி போலீஸாா் விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.