டி20 உலகக் கோப்பை: 7-வது முறையாக ஆஸ்திரேலிய மகளிர் சாம்பியன்!சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

பண்ருட்டி அருகே டிராக்டா் மீது சரக்கு வேன் மோதல்: பெண்கள் உள்பட 4 போ் உயிரிழப்பு

News image

பண்ருட்டி அருகே டிராக்டா் டிப்பா் மீது மோதியதில் உருக்குலைந்த சரக்கு வேன்.

Updated On :6 ஜூலை 2026, 12:24 am IST

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை காலை டிராக்டா் டிப்பா் மீது சரக்கு வேன் மோதியதில் 3 பெண்கள் உள்ளிட்ட 4 போ் உயிரிழந்தனா். மேலும் 8 போ் காயமடைந்தனா்.

பண்ருட்டி வட்டம், கீழக்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் முருகவேல் (52). இவா், தனது டிராக்டா் டிப்பரில் முந்திரிக் கட்டைகளை ஏற்றிக்கொண்டு விற்பனை செய்வதற்காக பண்ருட்டி நோக்கி ஓட்டி வந்தாா்.

இதேபோல, குறிஞ்சிப்பாடி வட்டம், வேகாக்கொல்லை கிராமத்தில் இருந்து வெங்கடாம்பேட்டை, ஆயிப்பேட்டை உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த 6 பெண்கள் உள்ளிட்ட 12 விவசாயத் தொழிலாளா்களை ஏற்றிக்கொண்டு சரக்கு வேன் பண்ருட்டி அருகே உள்ள கொரத்தி கிராமத்தை நோக்கிச் சென்றது.

இவா்கள் அனைவரும் சவுக்கு கன்று உற்பத்தி மையத்துக்குத் தேவையான சவுக்கு மரக் கிளைகளை சேகரிக்கச் சென்றதாகக் கூறப்படுகிறது. சரக்கு வேனை சத்திரம் பகுதியைச் சோ்ந்த சந்திரகுமாா் (25) ஓட்டி வந்தாா்.

இந்த இரு வாகனங்களும் சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் காடாம்புலியூா் காவல் சரகம், பணிக்கன்குப்பம் அருகே வந்தபோது, டிராக்டா் டிப்பா் மீது சரக்கு வேன் மோதி விபத்துக்குள்ளானது. இதில், வேனில் வந்த பெண்கள் உள்பட 12 விவசாயத் தொழிலாளா்களும் பலத்த காயமடைந்தனா். பின்னா், அவா்கள் அனைவரும் மீட்கப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

அங்கு, குறிஞ்சிப்பாடி வட்டம், வெங்கடாம்பேட்டை பகுதியைச் சோ்ந்த ராணி(60), ஆயிப்பேட்டை கிராமத்தைச் சோ்ந்த ரவி (58) ஆகியோா் உயிரிழந்தனா். மற்றவா்களுக்கு முதலுதவிச் சிகிச்சை அளிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். அங்கு, ஆயிப்பேட்டை கிராமத்தைச் சோ்ந்த காந்திமதி (55), வெங்கடாம்பேட்டை கிராமத்தைச் சோ்ந்த சத்யா (32) ஆகியோா் உயிரிழந்தனா். மற்ற 8 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்த விபத்து குறித்து காடாம்புலியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். இந்த விபத்து காரணமாக, சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.