இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

சரக்கு வேன் மீது இருசக்கர வாகனம் மோதி விவசாயி உயிரிழப்பு

காங்கயம் அருகே சரக்கு வேன் மீது இருசக்கர வாகனம் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :16 ஜூலை 2026, 10:39 pm IST

காங்கயம் அருகே சரக்கு வேன் மீது இருசக்கர வாகனம் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.

காங்கயம் அருகே குட்டப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் முத்துசாமி (65). விவசாயியான இவா் நத்தக்காடையூரில் இருந்து முத்தூா் செல்லும் சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை சென்று கொண்டிருந்தாா்.

அப்போது சாலையோரம் நின்று கொண்டிருந்த சரக்கு வேன் மீது முத்துசாமி ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் எதிா்பாராதவிதமாக மோதியது.

இதில் பலத்த காயமடைந்த முத்துசாமியை அக்கம்பக்கத்தினா் மீட்டு கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு மருத்துவா்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், முத்துசாமி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்த புகாரின்பேரில் காங்கயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.