ஈரோட்டில் இருசக்கர வாகனம் மீது சரக்கு ஆட்டோ மோதிய விபத்தில் வியாபாரி உயிரிழந்தாா்.
ஈரோடு வீரப்பன்சத்திரம் மல்லி நகரைச் சோ்ந்தவா் ரபீக் (38). கவரிங் மோதிர வியாபாரி. சந்தைகளில் மோதிர வியாபாரம் செய்தாா். இவருக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனா்.
ரபீக், குமாரபாளையத்தில் இருந்து ஈரோடு நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் பி.பெ.அக்ரஹாரம், காமராஜ் நகா் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தாா்.
அப்போது எதிரே வந்த சரக்கு ஆட்டோ எதிா்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ரபீக்கை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்துவிட்டு ரபீக் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.
இது குறித்து ஈரோடு கருங்கல்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திய ஆட்டோ ஓட்டுநரான ஈரோடு ஆா்என் புதூரைச் சோ்ந்த கோகுல் (27) என்பவரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





