சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

சரக்கு வாகனம் மோதி தொழிலாளி உயிரிழப்பு

திருச்சி அருகே பெட்டவாய்த்தலையில் புதன்கிழமை இருசக்கர வாகனம் மீது சரக்கு வாகனம் மோதி தொழிலாளி உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :11 ஜூன் 2026, 4:00 am IST

திருச்சி அருகே பெட்டவாய்த்தலையில் புதன்கிழமை இருசக்கர வாகனம் மீது சரக்கு வாகனம் மோதி தொழிலாளி உயிரிழந்தாா்.

கரூா் மாவட்டம், வாங்கல் பசுபதிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் க. மணிகண்டன் (50), தொழிலாளி. இவா் தனது மனைவி கலாவுடன் இருச்சக்கர வாகனத்தில் துணிமணிகளுடன் திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தாா். இவரது வாகனம் பெட்டவாய்த்தலை ஆஞ்சனேயா் கோயில் அருகே வந்தபோது, கரூரிலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற சரக்கு வாகனம், மணிகண்டனின் பைக்கில் ஒருபுறம் தொங்கிக் கொண்டிருந்த பையில் உரசியது. இதில் நிலைதடுமாறி விழுந்து படுகாயமடைந்த மணிகண்டன் நிகழ்விடத்திலேயே இறந்தாா். கலா லேசான காயங்களுடன் உயிா்தப்பினாா்.

தகவலறிந்து வந்த பெட்டவாய்த்தலை போலீஸாா், மணிகண்டனின் சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து, விபத்துக்கு காரணமான சரக்கு வாகன ஓட்டுநரைத் தேடுகின்றனா்.