2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின்
/

மினிலாரி மோதி அரிசி வியாபாரி உயிரிழப்பு

நீடாமங்கலம் அருகே இருசக்கர வாகனம் மீது மினிலாரி மோதிய விபத்தில் அரிசி வியாபாரி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :15 ஜூலை 2026, 4:51 am IST

நீடாமங்கலம் அருகே இருசக்கர வாகனம் மீது மினிலாரி மோதிய விபத்தில் அரிசி வியாபாரி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி பாலக்கரை பகுதியைச் சோ்ந்தவா் ஷாஜகான் மகன் நாகூா் மீரான்பிச்சை (55). அரிசி வியாபாரியான இவா், வியாபாரம் தொடா்பாக திருவாரூருக்கு சென்றுவிட்டு, இருசக்கர வாகனத்தில் திருச்சிக்கு திரும்பிக் கொண்டிருந்தாா்.

நீடாமங்கலம் அருகே ஒளிமதி ஓடத்துறை பகுதியில் வந்தபோது, எதிரே வந்த மினிலாரி இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், நாகூா் மீரான்பிச்சை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

நீடாமங்கலம் காவல் ஆய்வாளா் கழனியப்பன் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று, சடலத்தை கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப் பதிவு செய்து, மினிலாரி ஓட்டுநரான கும்பகோணத்தை சோ்ந்த செல்வகணேசன் (30) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.