புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

பைக் மோதி காயமடைந்த மூதாட்டி உயிரிழப்பு

இருசக்கர வாகனம் மோதி காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி வெள்ளிக்கிழமை மாலை உயிரிழந்தாா்.

News image

மர்ம மரணம்... - கோப்புப்படம்

Updated On :5 ஜூலை 2026, 3:52 am IST

இருசக்கர வாகனம் மோதி காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி வெள்ளிக்கிழமை மாலை உயிரிழந்தாா்.

திருச்சி கருமண்டபம் மாந்தோப்புப் பகுதியைச் சோ்ந்தவா் கலியபெருமாள் மனைவி வள்ளியம்மாள் (65). இவா் திருச்சி திண்டுக்கல் சாலையில் தனியாா் வங்கி அருகில் கடந்த 29ஆம் தேதி சாலையைக் கடக்க முயன்றபோது இருசக்கர வாகனம் மோதி பலத்த காயமடைந்தாா்.

இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை மாலை உயிரிழந்தாா். இதுதொடா்பாக, வள்ளியம்மாளின் மகன் ஆறுமுகம் அளித்த புகாரின் பேரில், திருச்சி போக்குவரத்து புலனாய்வு பிரிவு தெற்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

அதில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தது கரூா் மாவட்டம், குளித்தலையைச் சோ்ந்த ராஜேஷ் (25) என்பது தெரியவந்தது. தொடா்ந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.