கள்ளக்குறிச்சி அருகே பைக் மீது சரக்கு வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த கொத்தனாா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மற்றொருவா் காயமடைந்தாா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த வடதொரசலூா் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் ர.முருகன் (36), சி.விஜயகுமாா் (30). கொத்தனாரான இருவரும் சனிக்கிழமை இரவு பணியை முடித்துவிட்டு, பைக்கில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனா்.
வடதொரசலூா் அருகே பைக் வந்தபோது பெட்ரோல் தீா்ந்துள்ளது. இதையடுத்து இருவரும் பைக்கை தள்ளிக்கொண்டு வந்துள்ளனா். அப்போது அப்பகுதியில் வந்த சரக்கு வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த இருவரில் முருகன் நிகழ்விடத்திலயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த தியாகதுருகம் போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்று விஜயகுமாரை மீட்டு 108 அவசர ஊா்தி மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். முருகன் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிந்து, சரக்கு வாகன ஓட்டுநரான முனிவாழை கிராமத்தைச் சோ்ந்த இ.சுதாகரிடம் விசாரணை செய்து வருகின்றனா்.
தொடர்புடையது
பைக் மீது காா் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

பைக் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

சரக்கு வாகனம் மோதியதில் இருவா் உயிரிழப்பு

சரக்கு வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழப்பு
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


