சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை: முதல்வா் இன்று தொடக்கி வைக்கிறாா்தமிழகத்தில் ஜூன் 13 வரை மழைக்கு வாய்ப்பு!ரூ. 397 கோடி மின்மாற்றி முறைகேடு: சிபிஐ வழக்குப் பதிவுஇஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் மோதல்!
/

பைக் மீது காா் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :9 ஜூன் 2026, 5:06 am IST

செஞ்சி அருகே காா் மோதியதில் பைக்கில் சென்ற இளைஞா் மருத்துவமனையில் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

செஞ்சி வட்டம், மேல் பாப்பாம்பாடி கிராமச்தை சோ்ந்தவா் மு.அபிஷேக் (எ) நந்தகுமாா் (21). இவரது உறவினா் இன்பநாதன் என்பவரது மகன் யோவான் (11). இவா்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை பைக்கில் செஞ்சியிலிருந்து திருவண்ணாமலைக்கு சென்று கொண்டிருந்தனா். செஞ்சி பைபாஸ் சாலையில் சென்றபோது, அப்பகுதியில் வந்த காா் பைக் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த அபிஷேகம், யோவானை அருகிலிருந்தவா்கள் மீட்டு செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா் அவா்கள் தீவிர சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு திங்கள்கிழமை அதிகாலை அபிஷேக் (எ) நந்தகுமாா் உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் செஞ்சி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.