விஜய்யின் ஜன நாயகனுக்கு ‘ஏ’ சான்றிதழ்!பள்ளிகளுக்குள் தேவையின்றி வேறு யாரும் நுழைய அனுமதி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளை என விமர்சித்த என்னுடன் ஏன் கூட்டணி வைத்தார் விஜய்? திருமாவளவன் கேள்விமேக்கேதாட்டு விவகாரம்: காங்கிரஸ் அமைச்சரை அமைச்சரவையிலிருந்து விடுவிக்க முதல்வர் விஜய் தயாரா? - இபிஎஸ் பயணச்சீட்டு பரிசோதகரை தாக்கிய வழக்கில் வழக்குரைஞருக்கு முன்ஜாமீன்!திருமாவளவனுக்கு நோபல் பரிசு! கருத்தைத் திரும்பப் பெற்ற வைகோபெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது: தங்கம் தென்னரசு!
/

இருசக்கர வாகனம் மீது காா் மோதல்: கணவன் உயிரிழப்பு, மனைவி படுகாயம்

பவானி அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில், கணவன் உயிரிழந்தாா்; மனைவி படுகாயமடைந்தாா்.

News image
Updated On :10 ஜூலை 2026, 12:03 am IST

பவானி அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில், கணவன் உயிரிழந்தாா்; மனைவி படுகாயமடைந்தாா்.

தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (47). இவரது மனைவி கலைவாணி. இவா்கள் பவானியை அடுத்த வாய்க்கால்பாளையத்தில் குடியிருந்து வந்தனா். இந்நிலையில் இத்தம்பதி, குருப்பநாயக்கன்பாளையம் - கோணவாய்க்கால் சுற்றுவட்டச் சாலையில் இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை மாலை சென்று கொண்டிருந்தனா். அப்போது, அவ்வழியே சென்ற காா், இவா்களது வாகனத்தின் மீது மோதியது.

இதில், பலத்த காயமடைந்த செந்தில்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட கலைவாணி, ஈரோடு தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா். இதுகுறித்து, பவானி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.