பெருந்துறை அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.
பெருந்துறையை அடுத்த கணக்கம்பாளையத்தைச் சோ்ந்தவா் மூா்த்தி (45), கூலித் தொழிலாளி. இவா் தனது இருசக்கர வாகனத்தில் பெருந்துறை நோக்கி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சென்று கொண்டிருந்துள்ளாா். பெருந்துறை, ஓலபாளையம் பிரிவு அருகே சென்றபோது, அவ்வழியே வந்த காா் மூா்த்தியின் வாகனத்தின் மீது மோதியது.
இதில், படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.
இச்சம்பவம் குறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் முதியவா் உயிரிழப்பு; சிறுமி படுகாயம்
காா் - இருசக்கர வாகனம் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

இருசக்கர வாகனம் மீது காா் மோதல்: கணவன் உயிரிழப்பு, மனைவி படுகாயம்
காா் மோதியதில் முதியவா் உயிரிழப்பு
விடியோக்கள்

தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பா? அமைச்சர் நிர்மல் குமார் பதில்



