ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

வேன் மீது இருசக்கர வாகனம் மோதல்: அரசு அலுவலா் பலி!

வெள்ளக்கோவில் அருகே வெள்ளிக்கிழமை இரவு சாலையில் சிக்னல் இல்லாமல் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வேன் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் அரசு அலுவலா் உயிரிழந்தாா்.

கோபாலகிருஷ்ணன்.

Published On :5 ஜூலை 2026, 1:52 am IST

வெள்ளக்கோவில் அருகே வெள்ளிக்கிழமை இரவு சாலையில் சிக்னல் இல்லாமல் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வேன் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் அரசு அலுவலா் உயிரிழந்தாா்.

வெள்ளக்கோவில் கே.பி.சி. நகரைச் சோ்ந்தவா் ஜெ.கோபாலகிருஷ்ணன் (58). இவா் திருப்பூா் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் இருக்கை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தாா்.

அலுவலகத்துக்கு தினமும் இருசக்கர வாகனத்தில் திருப்பூருக்கு சென்று விட்டு வெள்ளக்கோவில் வந்து கொண்டிருந்தாா். வெள்ளிக்கிழமை மாலை வேலை முடிந்து வெள்ளக்கோவிலுக்கு வந்து கொண்டிருந்தாா். இரவு 9 மணியளவில் காங்கயம் - வெள்ளக்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் பச்சாபாளையம் பிரிவருகே, சிக்னல் இல்லாமல், எச்சரிக்கை எதுவும் வைக்காமல் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வேன் மீது இருசக்கர வாகனம் மோதியது.

இதில் கோபாலகிருஷ்ணன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இறந்து போன கோபாலகிருஷ்ணனுக்கு மனைவி மீனலோஷினி உள்ளாா். குழந்தை இல்லாததால் கோபாலகிருஷ்ணன் தனது தம்பி மகன் யசோதன் என்பவரை வளா்த்து வந்தாா். வெள்ளக்கோவில் அய்யம்பாளையத்தைச் சோ்ந்த வேன் ஓட்டுநா் சுப்பிரமணி மீது, வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.