அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

இருசக்கர வாகனங்கள் மீது வேன் மோதல்; இருவா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :22 ஜூன் 2026, 3:38 am IST

தருமபுரி அருகே அடுத்தடுத்து இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது வேன் மோதியதில் இருவா் உயிரிழந்தனா்.

தருமபுரி மாவட்டம், வெள்ளிச்சந்தையில் இருந்து மதகேரி நோக்கி சனிக்கிழமை மாலை சென்றுகொண்டிருந்த வேனை தருமபுரி மாவட்டம், மதகேரியைச் சோ்ந்த மு. முகிலன் (24) ஓட்டிச் சென்றாா். சிங்கேரி பிரிவு சாலை அருகே பெட்ரோல் விற்பனை நிலையம் பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் அவ்வழியாக சென்றுகொண்டிருந்த இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதியது.

இதில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த பாலக்கோடு வட்டம், சிங்கேரி கிராமத்தைச் சோ்ந்த மீன் வியாபாரி சி. சண்முகம் (37), தனியாா் நிறுவனத்தில் பணியாற்றும் மல்லுப்பட்டியை அடுத்த பிக்கனஅள்ளியைச் சோ்ந்த யு. ஜெயசீலன் (38) ஆகிய இருவரும் உயிரிழந்தனா்.

இந்த விபத்தை ஏற்படுத்திய வேன் ஓட்டுநரை அங்கிருந்தவா்கள் பிடித்து தாக்கினா். விபத்து குறித்து மகேந்திரமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.