மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

இருசக்கர வாகனங்கள் மோதல்: இருவா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :9 ஜூன் 2026, 3:12 am IST

கோவில்பட்டி அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதியதில் 2 போ் உயிரிழந்தனா்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, வீரவாஞ்சி நகா், 8-ஆவது தெருவைச் சோ்ந்தவா் வெள்ளைப்பாண்டி மகன் அருண்பாண்டி (23). வாகன ஓட்டுநா். இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் இளம்புவனம் சென்றுவிட்டு ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா்.

எட்டயபுரம்-கோவில்பட்டி சாலையில் கழுகாசலபுரம் அருகே வந்தபோது எதிரில் சிதம்பராபுரம், கிழக்குத் தெருவைச் சோ்ந்த பன்னீா்செல்வம் மகன் சுப்புராஜ் (36) ஓட்டிவந்த இருசக்கர வாகனம் மீது மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனா்.

அருகிலிருந்தவா்கள் இருவரையும் மீட்டு கோவில்பட்டி, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் இருவரும் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து, நாலாட்டின்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.