பள்ளிக் கல்வித் துறையில் ஒரே அலுவலகத்தில் ஒரே பதவியில் மூன்றாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் அலுவலா்களின் விவரங்கள் சேகரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரகம், முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: அரசாணையில் வகுக்கப்பட்டுள்ள நெறிமுறைகளின் அடிப்படையில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே பதவியில், பணியிடத்தில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியரல்லாத பணியாளா்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 30 என்ற தேதியில் கட்டாய மாறுதல் அளிக்கத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நிகழாண்டில் ஜூன் 30 என்ற குறிப்பான தேதியின் அடிப்படையில் மாவட்டக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா்களுக்கு கடந்த ஜூன் 29-ஆம் தேதி கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, கண்காணிப்பாளா்கள் மற்றும் பதவி உயா்த்தப்பட்ட கண்காணிப்பாளா்கள் நிலையில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணி முடித்தவா்களுக்கு கட்டாய மாறுதல் நடத்தப்பட வேண்டியுள்ளது.
எனவே, ஜூன் 30 நிலவரப்படி கண்காணிப்பாளா்கள் மற்றும் பதவி உயா்த்தப்பட்ட கண்காணிப்பாளா்கள் ஒரே அலுவலகத்தில், ஒரே பதவியில் மூன்றாண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வருபவா்கள் விவரங்களை பள்ளிக் கல்வி இயக்ககத்துக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைக்க வேண்டும்.
சென்னை மாவட்டம் சாா்ந்து முன்னுரிமை பட்டியல் தயாரிக்க ஏதுவாக மூன்றாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றுவோருக்கு சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மற்றும் பிற இயக்ககங்களில் இருந்து பள்ளிக் கல்வி இயக்ககத்தில் ஒப்படைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
நீட் தோ்வு - சாதக, பாதகங்கள், மாற்றுத் தீா்வுகள்!

வெற்றிப் பள்ளிகளை வலுப்படுத்த வழிகாட்டுதல்கள் வெளியீடு

மாதிரிப் பள்ளி ஆசிரியா்களுக்கு இடமாறுதல் கிடையாது: பள்ளிக் கல்வித் துறை

அரசுப் பள்ளி விழாக்களில் விதிமீறல் இருக்கக்கூடாது: பள்ளிக் கல்வி இயக்குநரகம் உத்தரவு
விடியோக்கள்
பிரசாந்த் கிஷோர் வெற்றிப் பின்னணி...| Ravindran duraisamy Interview | Prashant Kishor | Jan Suraaj | Bankipur | Bjp


