வியத்நாம் படகு விபத்து: விமானம் மூலம் மும்பை வந்தடைந்த 15 பேரின் உடல்கள்!வீரியமிக்க கரோனா பரவல் தமிழகத்தில் இல்லை: சுகாதாரத்துறைஇன்றும், நாளையும் மிதமான மழை வாய்ப்பு!ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணி! விவரங்களைச் சேகரிக்கும் கல்வித் துறை!பிஃபா: இன்று முதல் அரையிறுதி: பிரான்ஸ் - ஸ்பெயின் மோதல்!
/

தமிழகத்தில் 16 இடங்களில் வெயில் சதம்! இன்றும், நாளையும் மிதமான மழை வாய்ப்பு!

தமிழகத்தில் 16 இடங்களில் திங்கள்கிழமை 100 டிகிரி ஃபாரன்ஹீட் கடந்து வெப்பம் பதிவானது.

News image

மழை - பிரதிப் படம்

Updated On :14 ஜூலை 2026, 2:48 am IST

தமிழகத்தில் 16 இடங்களில் திங்கள்கிழமை 100 டிகிரி ஃபாரன்ஹீட் கடந்து வெப்பம் பதிவானது. மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 14), புதன்கிழமை (ஜூலை 15) மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, செவ்வாய்க்கிழமை (ஜூலை 14), புதன்கிழமை (ஜூலை 15), மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வட வானிலை நிலவக்கூடும். அவ்வப்போது ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

ஜூலை 16 முதல் ஜூலை 19 வரை: மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

16 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் 16 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் கடந்து வெப்பம் பதிவானது. அதிகபட்சமாக வேலூரில் 106.88 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

மதுரை விமான நிலையம் 105.8, மதுரை நகரம் 104.72, திருத்தணி 104, சென்னை மீனம்பாக்கம் 103.82, திருச்சி, புதுச்சேரி, கடலூா் தலா 102.74, சென்னை நுங்கம்பாக்கம் 102.38, பாளையங்கோட்டை 102.2, நாகை 101.84, ஈரோடு 101.48, பரங்கிப்பேட்டை, காரைக்கால் தலா 101.12, கரூா் பரமத்தி 100.4, நாமக்கல் 100.04 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

மழை அளவு: தமிழகத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்கோனாவில் 20 மி.மீ. மழை பதிவானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.