FOLLOW US

ON GOOGLE DISCOVER

வியத்நாம் படகு விபத்து: விமானம் மூலம் மும்பை வந்தடைந்த 15 பேரின் உடல்கள்!வீரியமிக்க கரோனா பரவல் தமிழகத்தில் இல்லை: சுகாதாரத்துறைஇன்றும், நாளையும் மிதமான மழை வாய்ப்பு!ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணி! விவரங்களைச் சேகரிக்கும் கல்வித் துறை!பிஃபா: இன்று முதல் அரையிறுதி: பிரான்ஸ் - ஸ்பெயின் மோதல்!
/

ரூ. 100 கோடி மோசடி! திமுக நிர்வாகி மீது பாய்ந்த குண்டர் தடுப்புச் சட்டம்!

திமுக நிர்வாகி மீது குண்டர் தடுப்புச் சட்டம் பதிவு.

News image

பி.டி. அரசகுமார் - கோப்புப் படம்

Updated On :14 ஜூலை 2026, 9:11 am IST

தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ. 100 கோடி மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட பி.டி. அரசகுமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பதிவு செய்ய சென்னை மாநகரக் காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை தியாகராய நகரில் செயல்படும் தமிழ்நாடு தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பின் செயலரும் திமுக நிர்வாகியுமான இளங்கோவன், சென்னை பெருநகர காவல் துறையின் மத்திய குற்றப்பிரிவில் அண்மையில் புகார் அளித்தார்.

அதில், கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளி நிர்வாகிகள் தங்கள் பள்ளிகளுக்கான அங்கீகாரம், தரம் உயர்த்துதல், திட்ட அனுமதி ஆகியவற்றைப் பெறுவதில் சிரமங்களை எதிா்கொண்டிருந்தனர்.

இதைப் பயன்படுத்தி சென்னை சாலிகிராமத்தில் ‘தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம்’ என்ற பெயரில் பதிவு செய்யப்படாத சங்கத்தை நடத்தி வரும் பி.டி. அரசகுமார், தனக்குள்ள அரசியல், அதிகார தொடர்புகளை பயன்படுத்தி தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளித் தரம் உயா்வு, டிடிசிபி, சிஎம்டிஏ அனுமதிகள், பிற சட்டபூா்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறியுள்ளார்.

இதை நம்பி தமிழகம் முழுவதும் உள்ள பல தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள் அவரிடம் பணம் கொடுத்துள்ளனர். பணம் பெற்றுக்கொண்ட பி.டி. அரசகுமார், உறுதியளித்தபடி அனுமதிகள் பெற்றுத் தராமலும், பணத்தைத் திருப்பித் தராமலும் சுமார் ரூ. 100 கோடி மோசடி செய்துள்ளாா். எனவே, இந்த மோசடியில் ஈடுபட்ட பி.டி. அரசகுமாா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

அந்தப் புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார், சென்னை சாலிகிராமம் மெஜஸ்டிக் காலனியில் வசித்து வரும் பி.டி. அரசகுமாரை (59) 2 வாரங்களுக்கு முன்பு கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட பி.டி. அரசகுமாரை 3 நாள்களில் போலீஸ் காவலில் விசாரணை நடத்த அனுமதி வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த் நிலையில், அரசகுமார் மீது, 50க்கும் மேற்பட்டோர் புகார் அளித்து இருப்பதால், சென்னை மாநகரக் காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவின்படி, நேற்று பி.டி. அரசகுமாரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் காவல் துறையினர் கைது செய்தனர்.

Summary

Chennai City Police Commissioner Amalraj has ordered the invocation of the Goondas Act against P.T. Arasakumar, who was arrested for allegedly defrauding private school administrators of ₹100 crore.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.